For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனாவின் தோற்றம் பற்றி சந்தேகம்.. அமெரிக்காவுடன் கை கோர்த்த இந்தியா.. சீனா எதிர்பார்க்காத டிவிஸ்ட்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பேட்டி சீனாவிற்கு பெரிய அளவில் அதிர்ச்சி அளித்து இருக்கிறது.

Recommended Video

    America உடன் கை கோர்த்த India... சீனாவே எதிர்பார்க்காத டிவிஸ்ட்

    கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சந்தேகங்கள் உலக நாடுகள் இடையே சண்டையாக முடிந்துள்ளது. கொரோனா வைரஸ் வுஹன் ஆராய்ச்சி மையத்தில் தோன்றி இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்புகிறார்.

    இந்த புகாரை அவர் மீண்டும் மீண்டும் வைத்து வருகிறார். இதற்காக அவர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார். உலகம் முழுக்க இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    லாக்டவுன் இப்டியே தொடர்ந்தா நீங்க இப்டித்தான் ஆவீங்க பாஸ்... விஜய் ஸ்டைல்ல ஒரு குட்டி ஸ்டோரி!லாக்டவுன் இப்டியே தொடர்ந்தா நீங்க இப்டித்தான் ஆவீங்க பாஸ்... விஜய் ஸ்டைல்ல ஒரு குட்டி ஸ்டோரி!

    கொரோனாவின் தோற்றம்

    கொரோனாவின் தோற்றம்

    கொரோனாவின் தோற்றம் குறித்து இத்தனை நாட்கள் அமெரிக்கா மட்டுமே சந்தேகம் கிளப்பி வந்தது. ஆஸ்திரேலியாவும், ஜெர்மனியும் இந்த சந்தேகத்தை வைத்தது. ஆனால் அமெரிக்காவின் வாதத்தை ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஏற்றுக்கொள்ளவில்லை. வுஹன் வைராலஜி மையத்தில் இருந்து இந்த வைரஸ் தோன்றி இருக்கலாம் என்ற வாதத்தை ஆஸ்திரேலியா, ஜெர்மனி இரண்டு நாடுகளும் மறுத்தது. இதை பற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறியது.

    விசாரணை செய்கிறோம்

    விசாரணை செய்கிறோம்

    கொரோனா வைரஸ் குறித்து சீனா உண்மைகளை மறைக்கிறது. ஆனால் இந்த வைரஸ் வுஹனில் இருந்துதான் கசிந்தது என்று முடிவிற்கு வர முடியாது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணைக்கு பின்தான் முடிவு செய்ய முடியும் என்று ஆஸ்திரேலியா கூறி இருந்தது. இதனால் சீனாவிற்கு எதிரான வைரஸ் புகாரில் அமெரிக்காவிற்கு இத்தனை நாள் யாரும் துணைக்கு கிடைக்கவில்லை.

    இந்தியா சந்தேகம்

    இந்தியா சந்தேகம்

    ஆனால் புதிய திருப்பமாக தற்போது அமெரிக்காவிற்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுக்க தொடங்கி உள்ளது. அதன்படி இந்தியாவின் மூத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளார். அவர் தனது பேச்சில், கொரோனா வைரஸ் எப்படி வாழ்கிறது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இதன் பின்புலத்தை ஆராய வேண்டும்.

    இயற்கையான வைரஸ் அல்ல

    இயற்கையான வைரஸ் அல்ல

    இந்த வைரஸ் வித்தியாசமானதாக இருக்கிறது. ஏனென்றால் இந்த வைரஸ் இயற்கையானது கிடையாது. இது செயற்கையாக உருவாக்கப்பட்டது. அதனால் இந்த வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும். உலகம் முழுக்க பல நாடுகள் இந்த வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இந்த வைரஸ் குறித்து நம்மால் கணிக்க முடியாமல் போனதற்கு, இது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்பது மட்டுமே காரணமாக இருக்க முடியும், என்று அவர் கூறியுள்ளார்.

    இந்தியா முதல்முறை இப்படி பேசுகிறது

    இந்தியா முதல்முறை இப்படி பேசுகிறது

    இந்தியாவை சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் கொரோனா வைரஸ் குறித்து இப்படி பேசுவது இதுவே முதல்முறை. அதேபோல் அமெரிக்காவிற்கு வெளியே, கொரோனா வைரஸ் லேபில் இருந்து வந்ததாக கூறும் முதல் நாடு இந்தியாதான். இதன் மூலம் சீனாவிற்கு எதிராக அமெரிக்காவை தவிர வேறு பெரிய நாடு பேச தொடங்கி உள்ளது. அதுவும் இந்தியா இப்படி பேசுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அரசு செய்த முயற்சி

    அரசு செய்த முயற்சி

    ஏற்கனவே சீனாவில் இருக்கும் நிறுவனங்களை இந்தியா தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருகிறது. அமெரிக்காவின் உதவியுடன் சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்களை நமது நாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முயல்கிறது. இதனால் சீனா இந்தியா மீது கோபத்தில் இருக்கிறது. இதற்கு மத்தியில் இந்தியாவை சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் இப்படி பேசி இருக்கிறார். இது சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    எதிர்பார்க்காத டிவிஸ்ட்

    எதிர்பார்க்காத டிவிஸ்ட்

    அமெரிக்காவின் வுஹன் தியரிக்கு யாரும் ஆதரவு தர மாட்டார்கள் என்றுதான் சீனா நினைத்தது. ஆனால் தற்போது இந்தியா அமெரிக்காவுடன் கை கோர்ப்பதற்கான சிக்னல் வர தொடங்கி உள்ளது. இது சீனா கொஞ்சமும் எதிர்பார்க்காத திருப்பம் ஆகும். இது இந்தியா சீனா இடையிலான உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    English summary
    India join hands with the USA on the Wuhan Theory against China for the first time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X