For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே ஒரு டிரோன்.. உருவான புதிய சிக்கல்.. ஈரான் செய்த காரியத்தால் அமெரிக்காவுடன் மோதும் இந்தியா!

அமெரிக்காவிடம் இருந்து ராணுவ கண்காணிப்பு டிரோன்களை வாங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய இந்திய ராணுவம் முடிவெடுத்துள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவிடம் இருந்து ராணுவ கண்காணிப்பு டிரோன்களை வாங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய இந்திய ராணுவம் முடிவெடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா உறவில் இது புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

அந்நிய நாடுகளை கண்காணிக்கவும், ராணுவ தளவாடங்களை கண்கணிக்கவும் பொதுவாக அமெரிக்க ஆளில்லாத, ஆயுதம் தாங்கிய டிரோன்களை பயன்படுத்துவது வழக்கம். பல விதங்களில், பல செயல் திறன்களை கொண்ட டிரோன்களை அமெரிக்க ராணுவம் பயன்படுத்தி வருகிறது.

அதிலும் முக்கியமாக யுஎஸ் குளோபல் ஹாக் என்ற அமெரிக்காவின் டிரோன் வகை விமானங்கள் அந்நாட்டு ராணுவத்தால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்த யுஎஸ் குளோபல் ஹாக் டிரோன்களை சென்ற மாதம் 20ம் தேதி ஈரான் சுட்டு வீழ்த்தியது. பெர்ஷியன் கடல் பகுதியில் இந்த யுஎஸ் குளோபல் ஹாக் சுற்றிக்கொண்டு கண்காணித்துக் கொண்டு இருந்தது. அப்போதே அதை கண்டுபிடித்த ஈரான் தனனுடைய எஸ் 300 ஏவுகணை மூலம் அதை சுட்டு வீழ்த்தியது.

இந்தியா திட்டம்

இந்தியா திட்டம்

இந்த யுஎஸ் குளோபல் ஹாக் ரக டிரோன் விமானங்களை இந்தியா வாங்கலாம் என்று திட்டமிட்டு இருந்தது. பாகிஸ்தான் எல்லையிலும் சீனா எல்லையில் இதை கண்காணிக்க பயன்படுத்தலாம் என்று இந்தியா திட்டமிட்டு இருந்தது. மொத்தமாக 30 டிரோன்களை 6 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கலாம் என்று இந்தியா திட்டமிட்டது.

வேண்டாம்

வேண்டாம்

இப்போது இந்தியா அந்த ஒப்பந்தத்தை செய்யாமல் தவிர்க்கலாம் என்று பார்க்கிறது. அதன்படி யுஎஸ் குளோபல் ஹாக் ஈரான் மூலம் எளிதாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. மிக எளிதாக அதை சுட்டு வீழ்த்தி உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் அதிக ஏவுகணைகளை கொண்ட பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளை யுஎஸ் குளோபல் ஹாக் வைத்து கண்காணிக்க முடியாது.

தேவையில்லை

தேவையில்லை

இந்தியா இந்த யுஎஸ் குளோபல் ஹாக்கைய வாங்குவது தேவையில்லாத பண விரயம் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தியா இந்த 6 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை செய்ய வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். அதே சமயம் அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசியதற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் விளக்கப்பட்டுள்ளது.

English summary
India may reconsider its plan of buying Drones from the USA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X