For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரிய ட்விஸ்ட்.. இந்தியாவுடன் சாபஹார் ரயில் பாதை ஒப்பந்தத்தை நாங்கள் போடவேயில்லை.. ஈரான் அதிரடி

Google Oneindia Tamil News

தெஹ்ரான்: சாபஹார் துறைமுகத்திலிருந்து ஆப்கான் எல்லை வழியாக சஹேதான் வரை ரயில் பாதை அமைக்கும் ஒப்பந்தத்தை இந்தியா உடன் ஈரான் மேற்கொள்ளவேயில்லை என்று, அந்த நாடு தெரிவித்துள்ளது.

ரயில்வே ஒப்பந்தத்தை ஈரான் ரத்து செய்ததாக தகவல் வெளியான நிலையில், ஈரான் அப்படி ஒரு ஒப்பந்தமே போடவில்லை என கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சாபஹார் துறைமுகத்திலிருந்து ஆப்கான் எல்லை வழியாக சஹேதான் வரை ரயில் பாதை அமைக்கும் ஒப்பந்தத்தை இந்தியா உடன் ஈரான் 4 ஆண்டுகளுக்கு முன்பாக மேற்கொண்டதாகவும், இந்திய தரப்பிலிருந்து நிதி அளிப்பதில் தாமதமாகி வருவதால், இந்தத் திட்டத்தை ஈரானே நிறைவேற்றிக் கொள்ள உள்ளதாகவும் இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில நாளேடு என்று செய்தி வெளியிட்டது.

சீனாவோடு செய்த டீல்.. இந்தியாவின் சாபஹார் ரயில்வே திட்டத்தை ரத்து செய்த ஈரான்.. பரபரப்பு முடிவு! சீனாவோடு செய்த டீல்.. இந்தியாவின் சாபஹார் ரயில்வே திட்டத்தை ரத்து செய்த ஈரான்.. பரபரப்பு முடிவு!

ஊடக தகவல்

ஊடக தகவல்

இதைடுத்து பல ஊடகங்களில் இந்த தகவல் வெளியானது. அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்கு பயந்து முதலீடு செய்வதில் இந்தியா தயக்கம் காட்டியதாகவும், அந்த ஊடக செய்தி கூறியது. ஆனால், இதை ஈரான் மறுத்துள்ளது. அப்படி ஒரு ஒப்பந்தமே இதுவரை செய்யப்பட்டது இல்லையாம்.

ஒப்பந்தம் இல்லை

ஒப்பந்தம் இல்லை

ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பின் துணைத் தலைவர் ஃபர்ஹாத் மோன்டேசர் இந்த செய்தியை "முற்றிலும் தவறானது, ஏனெனில் ஈரான், சகேதான்-சாபஹார் ரயில்வே தொடர்பாக இந்தியாவுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இரு முதலீடுகள்

இந்தியாவின் இரு முதலீடுகள்

"ஈரான் நாட்டின், சாபஹாரில் முதலீடு செய்வதற்காக இந்தியாவுடன், இரண்டு ஒப்பந்தங்களில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளது ஈரான். அதில் ஒன்று துறைமுகத்தின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுடன் தொடர்புடையது, இரண்டாவதாக, அந்த துறைமுகத்தில், இந்தியாவின் 150 மில்லியன் டாலர் வரையிலான தொடர்புடையது" என்று ஃபர்ஹாத் மோன்டேசர் கூறியதாக, ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

சாபஹார் துறைமுகத்தில் இந்தியா செய்ய விரும்பிய முதலீடுகளின் பட்டியலில் சாபஹார் ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் ரயில்வே கட்டமைப்பு ஆகியவை இருந்தன. ஆனால் பேச்சுவார்த்தைகளின் போது அது ஒப்புக்கொள்ளப்படவில்லை. பொருளாதாரத் தடைகளுக்கும், சாபஹரில் ஈரான்-இந்தியாவின் முதலீடுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Recommended Video

    India- வை சீண்டி சிக்கலில் மாட்டிக்கொண்ட China

    English summary
    Iran denied an Indian newspaper report that New Delhi was dropped from a key rail project along the border with Afghanistan after it showed reluctance in investing fearing American sanctions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X