For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாமாயிலில் கைவைத்த இந்தியா.. சவால்களை சமாளிப்போம்.. எல்லாம் "தற்காலிகமானது".. மலேசியா

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: பாமாயில் கொள்முதலைக் குறைப்பதற்கான இந்தியாவின் நடவடிக்கை "தற்காலிகமானது" என்றும், இந்த பிரச்சனை இரு நாடுகளுக்கிடையில் இணக்கமாக தீர்க்கப்படும் என்றும் மலேசியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டை மலேசியா கடுமையாக விமர்சித்தது. இந்த இரு விவகாரத்திலும் மலேசியாவின் நிலைப்பாடு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தது,

 India Palm Oil Import Curbs Temporary: Malaysia

இதனால் அதிருப்தி அடைந்த இந்திய அரசு, எண்ணெய் இறக்குமதியாளர்களிடம் மலேசிய பாமாயிலை இறக்குமதி செய்வதை தவிர்க்குமாறு மறைமுக உத்தரவு பிறப்பித்தது.

இதன் காரணமாக கடந்த இரு மாதங்களாகவே மலேசியாவில் இருந்து பாமாயில்இறக்குமதி செய்வது அடியோடு நின்றுவிட்டது. அதற்கு பதில் இந்தோனேஷியாவில் இருந்து இந்தியா இறக்குமதியாளர்கள் கொஞ்சம் அதிக டாலர் கொடுத்தே இறக்குமதி செய்து வருகிறார்கள்.

இதனிடையே இந்த பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்துள்ள மலேசியா அரசு, பாமாயில் கொள்முதலைக் குறைப்பதற்கான இந்தியாவின் நடவடிக்கை "தற்காலிகமானது" என்றும், இரு நாடுகளுக்கிடையில் இணக்கமாக தீர்க்கப்படும் என்றும் மலேசியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்னு நிரூபித்த திமுக பிரமுகர்.. கிராம மக்களுக்கு என்ன செய்தார் தெரியுமா?தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்னு நிரூபித்த திமுக பிரமுகர்.. கிராம மக்களுக்கு என்ன செய்தார் தெரியுமா?

மேலும் நீண்டகால இருதரப்பு உறவுகளைக் கொண்ட இரு நாடுகளும் தற்போதைய சவால்களை சமாளிக்கும், மேலும் பரஸ்பர மற்றும் நன்மை பயக்கும் விளைவுகளை நோக்கி முன்னேறும் என்றும் மலேசியாவின் தொழிற்துறை அமைச்சர் தெரசா கோக் கூறியதாக மலேசிய பாம் ஆயில் கவுன்சில் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த மாதத்திலிருந்து பி 20 பயோடீசலை செயல்படுத்தும் மலேசியாவின் முயற்சியால் இப்போது உள்ள கச்சா பாமாயில் விலையை தொடர்ந்து தக்கவைக்க உதவும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Malaysia said on Tuesday that India's move to cut back on palm oil purchases is "temporary" and will be resolved
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X