For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சியோலில் ஆற்றில் விழுந்த 5 வயது சிறுவனை காப்பாற்றிய புதுவை இளைஞர்.. குவியும் பாராட்டுகள்

Google Oneindia Tamil News

சியோல்: தென்கொரியாவில் சியோலில் உள்ள ஹான் ஆற்றில் தவறி விழுந்த 5 வயது குழந்தையை தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய புதுவை இளைஞருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

புதுவையைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் செல்வராஜ்(39). இவர் சேஜோங் பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கடந்த 13-ஆம் தேதி தனது நண்பர் ஆனந்தகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சியோலில் உள்ள யோஹூய்டோ ஹாங்கேங் எனும் பூங்காவுக்கு வந்திருந்தனர்.

இந்த பூங்கா ஹான் ஆற்றின் கரையில் இருந்தது. அப்போது அந்த ஆற்றின் படிக்கட்டுகளில் அமர்ந்து ஆரோக்கியராஜ் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.

எல்லை விவகாரம்: அரசியல் அப்புறம்... மத்திய அரசுடன் ஒட்டுமொத்தமாக இணைந்த சபாஷ் எதிர்க்கட்சிகள் எல்லை விவகாரம்: அரசியல் அப்புறம்... மத்திய அரசுடன் ஒட்டுமொத்தமாக இணைந்த சபாஷ் எதிர்க்கட்சிகள்

பெற்றோர்

பெற்றோர்

அப்போது பக்கத்தில் 5 வயது சிறுவனும், 7 வயது சிறுமியும் ஆற்றின் கரையில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வேலியை தாண்டி இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். ஓடும் நதிக்கு அருகேவும் அவர்கள் சென்றுவிட்டனர். அவர்களது பெற்றோரும் இதை கவனிக்கவில்லை. அந்த நேரத்தில் அந்த சிறுமி அங்கிருந்து தனது பெற்றோரிடம் சென்றுவிட்டார்.

கற்பாறை

கற்பாறை

சிறுவன் குறித்து பெற்றோர் கேட்ட போது அந்த சிறுமிக்கு சொல்ல தெரியவில்லை. அப்போது சிறுவன் ஆற்றுக்கு மிக அருகில் இருந்தான். உடனே செல்வராஜுக்கு ஏதோ தவறு நடப்பது தெரிந்தது. இதையடுத்து தனது பூட்ஸ்களை கழற்றினார். அந்த நேரத்தில் அந்த சிறுவன் கற்பாறைகளுக்கு சென்றான்.

சிறுவன்

சிறுவன்

அப்போது வழுக்கி ஆற்றுக்குள் விழுந்தான். உடனே பதறிய ஆரோக்கியராஜ் ஓடி சென்று தண்ணீரில் குதித்தார். அப்போது சக்தி வாய்ந்த அலைகள் அந்த சிறுவனை இழுத்து சென்று ஆழத்தில் கொண்டு செல்வதற்கு முன்னர் சிறுவனை காப்பாற்றினார். இதனிடையே அந்த சிறுவனை தேடி அவனது பெற்றோரும் வந்துவிட்டனர்.

சிறுவன்

சிறுவன்

சிறுவன் தண்ணீரை குடித்துவிட்டதால் இருமல் ஏற்பட்டது. அவனுக்கு சுயநினைவும் இருந்தது. ஆரோக்கியராஜுக்கு கொரிய மொழி தெரியாததால் சைகை மூலம் நடந்தவற்றை பெற்றோருக்கு கூறினார். அவர்களும் தங்கள் குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆரோக்கியராஜுக்கு நன்றி தெரிவித்தனர். ஆரோக்கியராஜ் புதுவையைச் சேர்ந்தவர். அவர் கொரியாவில் கடந்த 7 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

செல்போன்

செல்போன்

இதுகுறித்து ஆரோக்கியராஜ் கூறுகையில் நான் சிறந்த நீச்சல் வீரர் அல்ல. இதுவரை ஓடும் நீரில் மட்டுமே நீச்சல் அடித்துள்ளேன். பள்ளி நாட்களில் விடுமுறையின் போது தேங்கியிருக்கும் குளம், ஏரியில் நீச்சல் அடித்துள்ளேன். எனது சொந்த ஊர் புதுவையாக இருந்தாலும் அங்கு நான் இதுவரை ஓடும் நதியில் நீச்சல் அடித்ததே இல்லை. ஆற்றில் குதிக்கும் போது பர்ஸ், செல்போன், எனது மொத்த அடையாள அட்டைகளை பாக்கெட்டில் வைத்திருந்தேன்.

சியோல் தூதரகம்

சியோல் தூதரகம்

அதைபற்றி எல்லாம் கவலைப்படாமல் எனது உயிரை பற்றியும் கவலைப்படாமல் சிறுவனை காப்பாற்றிவிட்டேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றார். சியோலில் இந்த பேராசிரியருக்கு பாராட்டுகள் குவிகின்றன. சியோலில் உள்ள இந்திய தூதரகத்திலும் நடந்தவற்றை ஆரோக்கியராஜ் விளக்கினார்.

English summary
Indian Professor belongs to Puducherry saves Korean Child from drowning in Han River in Seoul river.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X