For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷ்யாவில் நடக்கும் எஸ்சிஓ கூட்டம்.. மேப் மூலம் சீண்டிய பாக்.. மீட்டிங்கிலிருந்து வெளியேறிய இந்தியா!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்து வரும் எஸ்சிஓ கூட்டத்தில் இருந்து இந்தியா வெளியேறி உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இருந்து இன்று இந்தியா வெளியேறியது.

ரஷ்யாவில் எஸ்சிஓ கூட்டமைப்பின் குழு கூட்டம் கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. ஷாங்காய் கோஆபரேஷன் ஆர்கனைசேஷன் எனப்படும் எஸ்சிஓ கூட்டம் ரஷ்யாவில் நடந்து வருகிறது.

சீனா, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிரிக்ஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த குழுவில் உள்ளது. இந்த நாடுகளின், வெளியுறவுத்துறை அமைச்சர்கள், பாதுகாப்பு துறை அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையே பல்வேறு கூட்டங்கள் இதில் நடந்து வருகிறது.

ரஷ்யா மீட்டிங்

ரஷ்யா மீட்டிங்

இந்த நிலையில் ரஷ்யாவில் நடந்து வரும் எஸ்சிஓ மீட்டிங்கில் இருந்து இந்தியா வெளியேறி உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இருந்து இன்று இந்தியா வெளியேறியது. இதில் கலந்து கொண்ட பாகிஸ்தானின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டத்தில் இருந்து வெளியேறி உள்ளது. உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையே இந்த கூட்டத்தில் இந்தியா சார்பாக அஜித் தோவல் கலந்து கொண்டார்.

எஸ்சிஓ

எஸ்சிஓ

இந்த கூட்டத்தில் எஸ்சிஓ கூட்டத்தில் பாகிஸ்தான் தவறான மேப்பை பயன்படுத்தியதால் இந்தியா கூட்டத்தில் இருந்து வெளியேறி உள்ளது. காஷ்மீர் பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்து தவறான மேப்பை பாக். இந்த கூட்டத்தில் பயன்படுத்தியது. பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து அஜித் தோவல் வெளியேறினார். பாகிஸ்தானின் செயலை இந்தியா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

இந்தியா விமர்சனம்

இந்தியா விமர்சனம்

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட கண்டனத்தில், பாகிஸ்தான் வேண்டுமென்று எஸ்சிஓ கூட்டத்தில் இந்த வரைபடத்தை பயன்படுத்தி உள்ளது. விதிகளை மீறி பாகிஸ்தான் செயல்பட்டுள்ளது. இந்தியாவை தூண்டும் விதமாக பாகிஸ்தான் இப்படி செயல்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் செயலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.

கோபம்

கோபம்

பொய்யான ஒரு வரைபடத்தை ரஷ்யாவின் உத்தரவையும் மீறி பாகிஸ்தான் இப்படி செயல்பட்டுள்ளது. பாகிஸ்தானின் செயலை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் இந்தியா இந்த கூட்டத்தில் இருந்து வெளியேறியது. இந்தியா கூட்டத்தில் இருந்து வெளியேறிய பின் பாகிஸ்தான், இந்தியாவிற்கு எதிராக பேசி உள்ளது. பாகிஸ்தானின் இந்த செயலை இந்தியா கண்டிக்கிறது, என்று இந்திய வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா எதிர்ப்பு

ரஷ்யா எதிர்ப்பு

பாகிஸ்தானின் செயலை ரஷ்யாவும் எதிர்த்து உள்ளது. தவறான மேப்பை பயன்படுத்த கூடாது என்று பாகிஸ்தானுக்கு ரஷ்யா ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது. ஆனால் ரஷ்யாவின் உத்தரவை மீறி பாகிஸ்தான் செயல்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் மீது ரஷ்யா கடுமையான கோபத்தில் இருப்பதாகவும், பாகிஸ்தானுக்கு எதிராக ரஷ்யா தனது கண்டனத்தை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

English summary
India quits SCO meet today after Pakistan uses a wrong map on Kashmir in the meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X