For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளிநாட்டு மாணவர்களின் படிப்புக்கு இந்தியாதான் "சீப் அண்ட் பெஸ்ட்"!

Google Oneindia Tamil News

மெல்பர்ன்: இந்தியா வெளிநாட்டு மாணவர்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் கல்வி கற்க ஏற்ற நாடு என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் குறைந்த செலவில் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில ஏற்ற நாடாக இந்தியா தேர்வாகியுள்ளது.

இதுகுறித்து எச்.எஸ்.பி.சி ரீடெய்ல் பேங்கிங் நிறுவனம் உலக அளவில் 15 நாடுகளில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

ஆண்டுக்கு 5642 டாலர்கள்:

ஆண்டுக்கு 5642 டாலர்கள்:

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் ஒரு வெளிநாட்டு மாணவர் கல்வி பயில ஆண்டுக்கு 5642 டாலர்களே செலவாகிறது.

ஹப்பா ...42,000 டாலர்கள்:

ஹப்பா ...42,000 டாலர்கள்:

ஆனால் ஆஸ்திரேலியாவில் 42 ஆயிரம் டாலர்கள் செலவாகிறது. சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன் ஆகிய இடங்கள் அடுத்தடுத்து உள்ளன.

ரொம்பக் கம்மி:

ரொம்பக் கம்மி:

இந்தியாவை பொறுத்த வரை ஒரு வெளிநாட்டு மாணவர் ஆண்டுக்கு 581 டாலர்களை பல்கலைக்கழக கட்டணத்திற்காகவும், அன்றாட செலவுகளாக 5062 டாலர்கள் மட்டுமே செலவாகிறது.

15 நாடுகளிலும் ஆய்வு:

15 நாடுகளிலும் ஆய்வு:

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், ஹாங்காங், கனடா, பிரான்ஸ், மலேசியா, இந்தோனேசியா, பிரேசில், தைவான், துருக்கி, சீனா, மெக்ஸிகோ மற்றும் இந்தியாவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சர்வதே அனுபவக் கல்வி:

சர்வதே அனுபவக் கல்வி:

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்புவதற்கு காரணம், அயல்நாட்டு மொழிகளை கற்றுக்கொள்ளல், சர்வதேச அனுபவம், தனிச்சுதந்திரம் போன்றவற்றிகாகவே என்கிறது இந்த ஆய்வு.

பர்ஸ்ட் சாய்ஸ் ஆஸ்திரேலியா:

பர்ஸ்ட் சாய்ஸ் ஆஸ்திரேலியா:

எனினும், ஆசிய நாடுகளில் ஆஸ்திரேலியாவுக்கு அதிக மவுசு காணப்படுவது மிகவும் குறிப்பிடத்தக்க உண்மை. ஆனாலும், இந்தியாதான் குறைந்த கட்டணக் கல்விக்கு பெஸ்ட் என்பதும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

English summary
India is the cheapest place for an international student to attend an university with the annual expenditure coming to just USD 5,642 while Australia has been ranked as the most expensive at USD 42,093, according to a new study conducted in 15 destinations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X