For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊழல் நாடுகளின் பட்டியல் வெளியீடு இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

உலக அளவில் ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடத்தில் உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் 81வது இடம் புடித்த இந்தியா- வீடியோ

    பெர்லின்: உலக அளவில் ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடத்தை பெற்றுள்ளது.

    2017 ம் ஆண்டில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை பெர்லினைச் சேர்ந்த தனியார் நிறுவனமான "டிரான்பரன்சி இன்டர்நேஷனல்" வெளியிட்டுள்ளது.

    மொத்தம் 180 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலில், பொதுத்துறையில் ஊழல் அதிகம் நிறைந்த நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 2016 ம் ஆண்டில் ஊழல் அதிகம் நிறைந்த 176 நாடுகளின் பட்டியலில் இந்தியா 79வது இடத்தில் இருந்தது.

    இந்தியாவுக்கு 81வது இடம்

    இந்தியாவுக்கு 81வது இடம்

    2017 ம் ஆண்டில் 180 ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடத்தில் உள்ளது. பிலிப்பைன்ஸ், இந்தியா, மாலத்தீவு போன்ற நாடுகள் ஊழலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பத்திரிக்கையாளர்கள் கொலை

    பத்திரிக்கையாளர்கள் கொலை

    இந்த நாடுகளில் தான் பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்படுவதும் அதிகமாக உள்ளது என்றும் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் இந்த நாடுகளில் ஊழலுக்கு எதிரான கட்டுரைகளை வெளியிட்ட 15க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

    நியூஸிலாந்து முதலிடம்

    நியூஸிலாந்து முதலிடம்

    ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்திலும் டென்மார்க் இரண்டாமிடத்திலும் உள்ளன. பின்லாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் 3ஆம் இடத்தை பெற்றுள்ளன.

    சீனா 77, ரஷ்யா 135 இடம்

    சீனா 77, ரஷ்யா 135 இடம்

    சிங்கப்பூர், சுவீடன் நாடுகள் 6 ஆம் இடத்தையும், கனடா, லூக்ஸம்பெர்க் நெதர்லாந்து, யுகே ஆகிய நாடுகள் 8 ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் சீனா 77 வது இடத்திலும், பிரேசில் 96 வது இடத்திலும், ரஷ்யா 135 வது இடத்திலும் உள்ளது.

    சோமாலியாவுக்கு கடைசி இடம்

    சோமாலியாவுக்கு கடைசி இடம்

    இந்தப்பட்டியலில் கடைசியாக அதாவது ஊழல் அதிகம் நிறைந்த நாடுகளின் வரிசையில் சோமாலியா முதலிடத்தில் உள்ளது. தெற்கு சூடான் இரண்டாமிடத்திலும் சிரியா மூன்றாமிடத்திலும், ஆப்கானிஸ்தான் 4ஆம் இடத்திலும் ஏமன், சூடான் நாடுகள் 5ஆம் இடத்திலும் உள்ளன.

    English summary
    India’s ranking in the annual corruption index, released by Transparency International, slid to 81 among a group of 180 countries. New zealand has been named the least-corrupt country in the world. and Somalia is the world's most corrupt country in the list.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X