For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொழில் துவங்க சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 97வது இடம்- போர்ப்ஸ் லிஸ்ட்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகளவில், தொழில் துவங்க சிறந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா, 97வது இடத்தில் உள்ளது. 2015ம் ஆண்டில் தொழில் துவங்க சிறந்த நாடுகள் குறித்த பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. 144 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின்படி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதலிடத்தில் டென்மார்க் உள்ளது. அமெரிக்கா, 22வது இடத்திலும் இந்தியா, 97வது இடத்திலும் உள்ளன.

மத்திய அரசு தொழில்துறையை ஊக்குவிக்கவும், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தொழில் தொடங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று வெளிநாடுகளுக்கு அழைப்புவிடுத்து வருகிறது இந்தியா. இதற்காக தொழில் தொடங்கும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் இந்தியா 97வது இடத்துக்கு சென்றுள்ளது.

டென்மார்க் நம்பர் 1

டென்மார்க் நம்பர் 1

தொழில் தொடங்குவதில் எளிய நடைமுறையை கடைப்பிடிக்கும் நாடுகள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் 144 நாடுகள் தரவரிசை படுத்தப்பட்டுள்ளன. இதில் தொழில் துவங்குவதற்கு சிறந்த நாடாக முதலிடத்தில் டென்மார்க் இடம்பெற்றுள்ளது. 2வது இடத்தை நியூசிலாந்தும், 3வது இடத்தை நார்வேயும் பிடித்துள்ளன.

சிங்கப்பூர் 8வது இடம்

சிங்கப்பூர் 8வது இடம்

சிங்கப்பூர் 8வது இடத்திலும், லண்டன் 10வது இடத்திலும் உள்ளன. ஜெர்மனி 18வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தென் ஆப்பிரிக்கா 47வது இடத்தையும், மெக்சிகோ 53வது இடத்தையும் பிடித்துள்ளது.

அமெரிக்கா பின்னடைவு

அமெரிக்கா பின்னடைவு

மிகப்பெரிய பொருளாதார நாடாக கருதப்படும் அமெரிக்கா 22வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு வரை 2வது இடத்தில் இருந்த இந்த நாடு, தரவரிசையில் படிப்படியாக சரிவடைந்துள்ளது. ஜப்பான் 23வது இடத்திலும், ரஷ்யா 81வது இடத்திலும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா 97வது இடம்

இந்தியா 97வது இடம்

இலங்கை 91வது இடத்திலும், சீனா 94வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் 103வது இடத்தில் உள்ளது. வெளிநாட்டு முதலீடு, மேக்இன் இந்தியா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், இந்தியா 97வது இடத்தையே பிடித்துள்ளது.

முதலீட்டாளர் பாதுகாப்பு

முதலீட்டாளர் பாதுகாப்பு

முதலீட்டாளர் பாதுகாப்பை பொறுத்தவரை இந்தியா 8வது இடத்திலும் உள்ளது. தனிநபர் சுதந்திரத்தில் 57வது இடத்திலும், சொத்துரிமையில் 61வது இடத்திலும் இருக்கிறது. ஆனால், வர்த்தக சுதந்திரத்தில் 125வது இடத்திலும், தொழில்நுட்ப சுதந்திரத்தில் 120வது இடத்திலும், நிதி சுதந்திரத்தில் 139 இடத்திலும் ஊழலில் 77வது இடத்திலும் இந்தியா உள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியா எதிர்கொள்ள வேண்டிய சவால்

இந்தியா எதிர்கொள்ள வேண்டிய சவால்

ஏழ்மை, ஊழல், வன்முறை, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடு, போதுமான மின்சார வசதி மற்றும் பகிர்மான வசதியின்மை, அறிவுசார் சொத்துரிமை விதிகளை போதுமான அளவு நடைமுறைப்படுத்தாதது, போதுமான போக்குவரத்து வசதி, விவசாய உட்கட்டமைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் இந்தியா பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று போர்ப்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
India has ranked a low 97th out of 144 nations, behind Kazakhstan and Ghana, on Forbes’ annual list of the best countries for business in 2015, scoring poorly on metrics like trade and monetary freedom and tackling challenges like corruption and violence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X