For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி-சீன பிரதமர் போட்டோதான் உலகின் சிறந்த செல்ஃபி! போர்ப்ஸ் பத்திரிகை சர்டிபிகேட்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் அந்த நாட்டு பிரதமருடன், இந்திய பிரதமர் மோடி எடுத்த ‘செலஃபி' உலகின் சிறந்த ‘செல்ஃபி'யாக போர்பஸ் பத்திரிகை அறிவித்து உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, பதவிக்கு வந்த பின்னர் முதன்முதலாக சீனாவுக்கு 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் சென்றார்.

சீன அதிபர் ஜின்பிங்கின் சொந்த ஊரான சீனாவின் பழமையான நகரமான ஷான்ஸி மாகாணத்தில் உள்ள ஸியான் நகருக்கு தனி விமானத்தில் சென்றடைந்த மோடிக்கு, விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் அவர் அங்குள்ள பிரசித்தி பெற்ற டாஜிங்ஷான் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு தன்னை காணவந்த சீன மக்களுடன் கலந்துரையாடினார். நேற்று தலைநகர் பீஜிங்கில் பிரதமர் மோடி, சீன பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பிரதமர் மோடி, சீனப்பிரதமர் லீ கெகியாங்குடன் பீஜிங்கில் உள்ள கோவிலுக்கு சென்றார். அங்கு அவர்களை கண்டதும் உற்சாகத்துடன் குவிந்த சீன குழந்தைகளுடன், அவர் ‘செல்ஃபி' படம் எடுத்துக்கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி மொபைல் போனில் சீன பிரதமர் லீ கெகியாங்குடன் ‘செல்ஃபி' எடுத்துக் கொண்டார். பிரதமர் மோடியும், சீன பிரதமர் லீ -கெகியாங்கும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பிபடம், உலகில் தலை சிறந்த ‘செல்ஃபி' படமாக போர்பஸ் பத்திரிகை பாராட்டியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரத்தில் லட்சகணக்கானோர் லைக் கொடுத்து, பார்த்து பாராட்டி உள்ளனர்.

'இது செல்ஃபி நேரம், பிரதமர் லீ கெகியாங்கிற்கு நன்றி' என்ற தலைப்பில் இந்தபடம் பிரதமர் மோடியின் டிவிட்டர் பக்கத்தில், வெளியாகியது. பேஸ்புக்கில் இந்த படத்தை லைக் போட்டவர்களில் பேஸ்புக் சமூகவலைத்தின் நிறுவனர் மார்க் சுகர்பெர்க்கும் அடங்குவார்.

English summary
India’s prime minister Narendra Modi, currently on a visit to China, just posted a selfie with Li Keqiang, premier of the People’s Republic of China, informally called China’s prime minister. The two powerful men are seen standing shoulder-to-shoulder at the Temple of Heaven in central Beijing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X