For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டைம் 'டாப் டென்'னில்... இந்தியாவின் பாலியல் பலாத்காரங்கள்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: டைம் பத்திரிக்கையின், 2013ம் ஆண்டின் டாப் 10 செய்திகளில் இந்தியாவின் பாலியல் பலாத்கார விவகாரங்களுக்கு 9வது இடம் கிடைத்துள்ளது.

இந்தியாவின் பாலியல் பலாத்கார பரபரப்புகளை பாலியல் பலாத்கார தொற்றுநோய் என்று டைம் வர்ணித்துள்ளது.

குறிப்பாக டெல்லியில் நடந்த ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி பின்னர் மரணமடைந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளது டைம்.

உலகின் 9வது பரபரப்பான செய்தி

உலகின் 9வது பரபரப்பான செய்தி

டெல்லியில் நடந்த மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் மரணமடைந்தது உள்ளிட்ட இந்தியாவில் நடந்த பல்வேறு பாலியல் பலாத்காரங்கள் உலகின் 9வது பரபரப்பான செய்தி என்று டைம் தெரிவித்துள்ளது.

தாமதமான நியாயம்

தாமதமான நியாயம்

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்படாமல் விசாரணை நீ்ண்ட காலம் நடந்ததாகவும் டைம் குறிப்பிட்டுள்ளது.

மும்பையில் நடந்த பலாத்காரம்

மும்பையில் நடந்த பலாத்காரம்

அதேபோல மும்பபையில் 23 வயதுப் பெண் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதையும் முக்கியமாக குறிப்பிட்டுள்ளது டைம். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகவும் அது சுட்டிக் காட்டியுள்ளது.

வங்கதேச தீவிபத்து

வங்கதேச தீவிபத்து

வங்கதேசத்தில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி நடந்த மிகப் பெரிய தீவிபத்தில் கார்மெண்ட் தொழிலாளர்கள் 1100 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை உலகின் 7வது பரபரப்பான செய்தியாக டைம் தெரிவித்துள்ளது.

சிரியப் போருக்கு முதலிடம்

சிரியப் போருக்கு முதலிடம்

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேபபோல ஈரான் விவகாரம், எகிப்துப் புரட்சி உள்ளிட்டவையும் முதல் இடங்களைப் பிடித்துள்ளன.

English summary
Time magazine has listed "India's Rape Epidemic", about the nationwide uproar over a number of rape incidents, especially following a shocking gang rape in Delhi, as the ninth top world news story of 2013. Mass protests at the time over the shocking gang rape of a woman in a bus in Delhi at the end of 2012, the influential US news magazine noted "demanded greater protection for women and swift justice."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X