For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'தன் முகத்தில் தானே அறைந்துகொண்டதாம் இந்தியா'.. சீனா விமர்சனம் !

இந்திய சீன எல்லைப்பகுதியில் சாலை அமைக்க, சீன ராணுவம் முயன்றதாகக் கூறி இந்திய ராணுவம் படைகளை குவித்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள சீனா, இப்போது இந்தியா ஏன் லடாக் பகுதியில் சால

By Devarajan
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்திய ராணுவம் லடாக் பகுதியில், சாலை அமைக்க முயற்சிப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. டோக்லாம் பகுதியில் சீன ராணுவத்தை தடுத்த இந்தியா இப்போது லடாக் பகுதியில் சாலை அமைக்க முடிவு செய்துள்ளதன் மூலம், 'தன் முகத்தில் தானே அறைந்துகொண்டுள்ளது இந்தியா' என்று சீன அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியா சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக, நேர் எதிர்மாறான செயல்களில் ஈடுபடுவதாக சீனா பகிரங்க புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், ஹுவா சுன் யுங் கூறுகையில், " டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைக்க முயன்றது என்று கூறி படைகளை குவித்தது. அதனால்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.

 'India Slapped Its Own Face' China Criticize on Ladakh Road issue

இந்த நிலையில், இப்போது மேற்கு எல்லையில், லடாக் அருகே, மார்சிம்மிக் லா முதல் லடாக் ஏரி வரை 20 கிலோ மீட்டர் தூரம் வரை சாலை அமைக்க இந்தியாவின் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இது எப்படி சரியானதாகும்?

டோக்லாம் எல்லை பகுதியில் உள்ள சிக்கல்களே இன்னும் முடியாத போது, இந்தியா எப்படி லடாக் பகுதியில் சாலை அமைக்க முயற்சி செய்யலாம். இது இன்னும் இருநாடுகள் மத்தியில் உள்ள போர்ப் பதற்றத்தை அதிகரிக்கவே செய்யும்.

எனவே லடாக் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகளை எந்தவித நிபந்தனையும் இன்றி வாபஸ் பெறவேண்டும். அப்போதுதான் இருதரப்புக்கும் தீர்வு கிடைக்கும் " என்று தெரிவித்துள்ளார்.

English summary
Chinese Foreign Ministry spokesperson Hua Chunying said 'India Slapped Its Own Face' to the press at china.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X