For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்து கவர்ந்து சென்ற கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வழக்கு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தால் கவர்ந்து செல்லப்பட்ட, கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கே திருப்பியளிக்க கோரி, அந்நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் மீது வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய சுரங்கத்தில் இருந்து சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது, 104 கேரட் மதிப்பு கொண்ட கோஹினூர் வைரம். இதையடுத்து, கோயில் ஒன்றில் அம்மனின் கண்களில் பொருத்தப்பட்டிருந்தது அந்த வைரம்.

India sues the Queen for return of Koh-i-Noor diamond

வைரத்தை கண்டுபிடித்தபோது ஆட்சி செய்தது காகதீய ராஜவம்சம். ஆனால் அதன்பின் பல ஆக்கிரமிப்பாளர்களிடம் கைமாறிய வைரம், இறுதியில் பிரிட்டீஷிடம், இந்தியா அடிமைபட்டபோது, அந்நாட்டு ராணியாக இருந்த விக்டோரியாவுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.

தற்போது இங்கிலாந்து அரசியின் சொத்தாக மாறிய கோஹினூர் வைரம், லண்டன் டவரில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த முக்கிய தொழிலதிபர்கள் சிலரும், நடிகர்களும் இந்தியாவின் சொத்தான கோஹினூர் வைரத்தை, இந்தியாவுக்கே திருப்பியளிக்க வேண்டும் என இங்கிலாந்தின் தற்போதை ராணி இரண்டாம் எலிசபெத் மீது அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர். வழக்கு இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தால் இந்தியாவின் சொத்தான கோஹினுார் வைரம் மீண்டும் நமக்கு கிடைக்கும்.

English summary
Bollywood stars and businessmen have united to instruct lawyers to begin legal proceedings in London's High Court to return the Koh-i-Noor diamond.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X