For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ. 7 ஆயிரம் கோடி கடன்.. எடுத்துக்கோங்க.. ரஷ்யாவிற்கு வாரி வழங்கிய மோடி.. அதிரடி அறிவிப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : India to Give 7 thousand crores rupees to Russia

    மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களில் வளர்ச்சிக்காக இந்தியா 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுக்க முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டார்.

    இந்திய பிரதமர் மோடி தற்போது ரஷ்யா சென்று இருக்கிறார். நேற்று ரஷ்ய அதிபர் புடினுடன் அவர் பல்வேறு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார்.

    அதில் முக்கியமான ஒப்பந்தமாக ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள விளாடிவோஸ்டாக் பகுதியில் இருந்து சென்னைக்கு கடல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இனி சென்னைக்கும் ரஷ்யாவிற்கும் கடல் சரக்கு போக்குவரத்து நடக்கும்.

     வருகிறது அணு எரிபொருள்.. ரஷ்யாவில் கூடங்குளம் பற்றி ஆலோசனை.. இனி என்னவெல்லாம் நடக்கும்? வருகிறது அணு எரிபொருள்.. ரஷ்யாவில் கூடங்குளம் பற்றி ஆலோசனை.. இனி என்னவெல்லாம் நடக்கும்?

    மோடி

    மோடி

    இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி ரஷ்யாவின் கிழக்கு பொருளாதார மன்றம் சார்பாக நடந்த பொருளாதார ஒப்பந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளில் உள்ள நகரங்கள் குறித்து மோடி பேசினார். அதில், ரஷ்யாவின் வளர்ச்சிக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

    இந்தியா

    இந்தியா

    ரஷ்யாவும் இந்தியாவும் தோளோடு தோள் சாய்ந்து வளர்ச்சியை சந்திக்க போகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான நட்பு என்பது சாதாரண நட்பு கிடையாது. இது அரசுகளை தாண்டிய நட்பு. ரஷ்யா, இந்தியா இரண்டு நாட்டிலும் உள்ள நகரங்களுக்கு இடையிலும் நெருங்கிய நட்பு உள்ளது.

    தொடர்பு

    தொடர்பு

    இரண்டு நாட்டிற்கும் இடையில் நல்ல விதமான பொருளாதார தொடர்புகள் இருக்கிறது. ரஷ்யாவின் கிழக்கு பகுதி வேகமாக முன்னேற வேண்டும். ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் பகுதியுடன் பொருளாதார ரீதியாக உறவு கொள்ளும் முதல் நாடு இந்தியாதான்.

    கடன்

    கடன்

    ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள சிறிய நகரங்கள் முன்னேற வேண்டும் என்று இந்தியா முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. ரஷ்யாவிற்கு இந்தியா மொத்தம் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவின் வளர்ச்சிக்கு இந்த பணம் பயன்படுத்தப்படும்.

    உறவை மேம்படுத்தும்

    உறவை மேம்படுத்தும்

    இது இரண்டு நாட்டிற்கான உறவை மேலும் அதிகரிக்கும், நெருக்கமாக்கும். இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக முன்னேறி வருகிறது. 2024ல் இந்தியாவின் பொருளாதாரம் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும். இந்தியா அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    India to Give 7 thousand crores rupees to Russia as a loan says PM Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X