For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவுக்கு செக் - யு.எஸ், இந்தியா உட்பட 13 நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு உதயம்

Google Oneindia Tamil News

டோக்கியா: இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு ( Indo-Pacific Economic Framework-IPEF) என்கிற புதிய அமைப்பை உருவாக்கி உள்ளன.

ஜப்பான், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைக் கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தியாவின் குவாட் அமைப்பை கேள்விக்குள்ளாக்குமா யு.எஸ், ஆஸி, பிரிட்டனின் Aukus ஒப்பந்தம்?-அ.நிக்ஸன்இந்தியாவின் குவாட் அமைப்பை கேள்விக்குள்ளாக்குமா யு.எஸ், ஆஸி, பிரிட்டனின் Aukus ஒப்பந்தம்?-அ.நிக்ஸன்

இதனைத் தொடர்ந்து வளர்ச்சிக்கான இந்தோ- பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு Indo-Pacific Economic Framework உருவாக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்தார். இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை பொருளாதார ரீதியில் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த புதிய கூட்டமைப்பு. இது தொடர்பான வழிமுறைகளை ஆராய்வதற்கான பேச்சுவார்த்தைகளும் உடனேயே தொடங்கப்பட்டுவிட்டன.

13 நாடுகளின் கூட்டமைப்பு

13 நாடுகளின் கூட்டமைப்பு

இந்தோ பசிபிக் பொருளாதார கூட்டமைப்பில் மொத்தம் 13 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, புருனே, இந்தோனேசியா, மலேசியா, தென்கொரியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகள் இக்கூட்டமைப்பில் இணைந்துள்ளன. உலக உள்நாட்டு உற்பத்தியில் இந்த 13 நாடுகளின் பங்களிப்பு என்பது 40%.

பிரதமர் மோடி கருத்து

பிரதமர் மோடி கருத்து

இக்கூட்டமைப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி, அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்ய இதர நாடுகளுடனான பொருளாதார தொடர்பை வலுவாக்க வேண்டும். ஒருங்கிணைக்கப்பட்ட இந்தோ- பசிபிக் பிராண்ட்க்ஹியம் உருவாக்கப்பட வேண்டும் என்பதை இலக்காக கொள்ள வேண்டும். இதனை உருவாக்கும் போது எழும் சவால்களை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்தே எதிர்கொள்ளவும் வேண்டும். இக்கூட்டமைப்புடன் ஒவ்வொரு நாடுகளுடனான முதலீடுகளும் அதிகரிக்கும் என்றார்.

சீனாவுக்கு செக்

சீனாவுக்கு செக்


இத்தகைய கூட்டமைப்பான இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போடக் கூடியதாகவும் இருக்கும். இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் பெரும்பாலான நாடுகளுடன் சீனா தொடர்ச்சியான மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில் IPEF கூட்டமைப்பு சர்வதேச முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்கா விளக்கம்

அமெரிக்கா விளக்கம்

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் வர்த்தக துறை செயலாளர் Gina Raimondo கூறுகையில், சீனாவுடனான வர்த்தகத்துக்கு மாற்றாக இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு இருக்கும். ஆப்பிள் நிறுவனமானது சீனாவுக்கு வெளியே உற்பத்தி செய்ய முனைகிறது. பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு விலகவே விரும்புகின்றன. இந்தோனேசியா, வியட்நாம், மலேசிய ஆகிய நாடுகள் இந்த கூட்டமைப்பில் இணைவதாக கையெழுத்திட்டதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து பெரிய அளவில் நன்மைகளைப் பெற உள்ளன என்றார்.

குவாட், அக்கியூஸ்

குவாட், அக்கியூஸ்

ஏற்கனவே சர்வதேச அரங்கில் குவாட் அமைப்பானது சீனாவுக்கு எதிரான ஒரு அரசியல் கூட்டமைப்பாக கருதப்படுகிறது. தற்போது சீனாவுக்கு எதிரான 13 நாடுகளின் கூட்டமைப்பு பொருளாதாரத் துறையில் மிக முக்கியமான ஒன்றாகவும் எதிர்பார்க்கப்படுகிறது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். அதேபோல் இந்தோ- பசிபிக் மற்றும் தென் சீனக் கடல் விவகாரங்களை முன்வைத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இணைந்து அக்கியூஸ் (Aukus) ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கின. இந்த ஒப்பந்தமானது சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Indo-Pacific Economic Framework (IPEF) was launched by 13 Nations including India and US for counter to China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X