For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வியட்நாமில் மோடி.. பாதுகாப்பு, ஐடி துறை உள்ளிட்ட 12 ஒப்பந்தங்களில் கையெழுத்து

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஹனாய்: 4 நாட்கள் சுற்றுப்பயணமாக வியட்நாம், சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி முதல் நாளான இன்று வியட்நாம் சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பு, சுகாதாரம், ஐடி உள்ளிட்ட 12 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

4 நாட்கள் பயணத்தில் முதல் நாளாக பயணமாக இந்திய பிரதமர் மோடி வியட்நாம் சென்றுள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் இறுதியில் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

India, Vietnam sign 12 agreements

இந்த ஒப்பந்தத்தில் பாதுகாப்பு, சுகாதாரம், ஐடி உள்ளட்ட முக்கிய துறைகளில் கையெழுத்தாகி உள்ளது. மேலும் பிரதமர் மோடி, 500 மில்லியன் அமெரிக்க டாலர் வியட்நாமின் பாதுகாப்பிற்காகவும், 5 மில்லயன் அமெரிக்க டாலர்களை வியட்நாமில் ஐடி பார்க் அமைக்கவும் அறிவித்துள்ளார்.

முன்னதாக, வியட்நாம் தியாகிகளின் நினைவிடத்திற்கு சென்ற மோடி அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அந்நாட்டின் பெரும் தலைவரான கோசிமின் நினைவிடத்திற்கும் சென்று மோடி அஞ்சலி செலுத்தினார்.

2001ம் ஆண்டு அடல்பிகாரி வாஜ்பேய் பிரதமராக இருக்கும் போது வியாட்நாம சென்றிருந்தார். அதன் பிறகு பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர், இந்திய பிரதமர் வியாட்நாம் செல்வது இதுவே முதல் முறை.

English summary
India and Vietnam sign 12 agreements for cooperation in areas, including defence and IT, to boost bilateral ties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X