For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகிலேயே முதலீடு செய்ய உகந்த நாடு இந்தியா.. தொழில் செய்ய வாங்க.. பிரதமர் மோடி அழைப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    PM Modi at BRICS: உலகிலேயே முதலீடு செய்ய உகந்த நாடு இந்தியா..பிரதமர் மோடி அழைப்பு !

    பிரேசிலியா: உலகிலேயே முதலீடு செய்ய உகந்த நாடு என்றால் அது இந்தியா தான் என்றும், இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறும், பிரிக்ஸ் தொழில்துறை தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் பிரிக்ஸ் நாடுகளின் 11வது மாநாடு நடந்தது.. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை பிரேசிலியா வந்தார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக பிரிக்ஸ் நாடுகளின் தொழில்துறை தலைவர்கள் கூட்டம் நேற்று நடந்தது.

     India worlds most open, investment friendly economy: PM Modi

    இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில், " சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை நிலவி வரும் நிலையிலும் உலக பொருளாதாரத்தில் பிரிக்ஸ் நாடுகளின் பங்களிப்பு முக்கியமானதாகும். உலகலாவிய பொருளாதாரத்தில் 50 சதவீதத்தை பிரிக்ஸ் நாடுகள் தான் பூர்த்தி செய்கின்றன. பிரிக்ஸ் அமைப்பு தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில். இந்த அமைப்பு சரியான திசையில் செல்கிறது.

    தலைநகர் டெல்லியில் மிக அபாய கட்ட அளவில் காற்று மாசு,,, 489 ஏகிஐ ஆக உள்ளதால் எச்சரிக்கைதலைநகர் டெல்லியில் மிக அபாய கட்ட அளவில் காற்று மாசு,,, 489 ஏகிஐ ஆக உள்ளதால் எச்சரிக்கை

    அரசியல் ஸ்திரத்தன்மை, தெளிவான வர்த்தக கொள்கை, தொழில் செய்வதற்கு ஏற்ற வர்த்தக சீர்திருத்தங்கள் ஆகிய காரணங்களால் உலகிலேயே முதலீட்டுக்கு உகந்த சூழல் நிலவும் நாடாக இந்தியா விளங்குகிறது.

    இந்தியாவின் பொருளாதாரத்தை வரும் 2024ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலராக (350லட்சம் கோடி) உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதற்காக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மட்டுமே 1.5 டிரில்லியன்(1.05லட்சம் கோடி) தேவைப்படுகிறது.

    இந்தியாவில் அளவில்லா தொழில் வாய்ப்பு உள்ளது. எனவே பிரிக்ஸ் நாடுகளின் தொழில் துறை தலைவர்க இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்" என்றார்.

    English summary
    pm modi at brics: pm modi calls on brics business leaders to invest india
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X