For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய போர் விமானம் எங்கள் எல்லைக்குள் வந்தது.. பதிலடி கொடுத்தோம்.. பாக். ராணுவம் பகீர் புகார்!

இந்திய ராணுவத்தின் போர் விமானம் ஒன்று எல்லை தாண்டி வந்ததாக பாகிஸ்தானுக்குள் வந்ததாக பாகிஸ்தான் ராணுவம் பகீர் புகார் அளித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    எங்கள் எல்லைக்குள் இந்திய போர் விமானம் வந்தது- பாகிஸ்தான் ராணுவம் புகார்- வீடியோ

    இஸ்லாமாபாத்: இந்திய ராணுவத்தின் போர் விமானம் ஒன்று எல்லை தாண்டி வந்ததாக பாகிஸ்தானுக்குள் வந்ததாக பாகிஸ்தான் ராணுவ பகீர் புகார் அளித்து இருக்கிறது.

    ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருந்தே இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்திய ராணுவம் அங்கு குவிக்கப்பட்டு வருவதால் கடுமையான போர் பதற்றம் நிலவிக் கொண்டு இருக்கிறது.

    Indian Air Force violated Line of Control claims Pakistan Army

    புல்வாமாவில் நடந்த தாக்குதலில் மொத்தம் 41 இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இதனால் எல்லையில் மிக கடுமையான பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    இந்த நிலையில் புதிய திருப்பமாக பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளது. இந்திய ராணுவத்தின் போர் விமானம் ஒன்று எல்லை தாண்டி வந்ததாக பாகிஸ்தானுக்குள் வந்ததாக பாகிஸ்தான் ராணுவ புகார் அளித்து உள்ளது.

    பாகிஸ்தான் ராணுவம் அளித்துள்ள புகாரில், இந்தியா ராணுவத்தின் போர் விமானம் ஒன்று பாகிஸ்தானின் முசாபராபாத் பகுதிக்குள் வந்தது. ஆனால் பாகிஸ்தான் விமானப்படை வேகமாக செயல்பட்டு, பதிலடி கொடுத்தது.

    Indian Air Force violated Line of Control claims Pakistan Army

    பாகிஸ்தான் கொடுத்த பதிலடி காரணமாக இந்திய விமானம் திரும்பி சென்றது. இந்திய ராணுவ விமானம், பாகிஸ்தானுக்குள் வந்ததால், எந்த விதமான தாக்குதலோ, அசம்பாவிதமோ நடக்கவில்லை, என்று பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.

    இது இரண்டு நாடுகளுக்கு இடையே பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இதற்கு இந்திய ராணுவம் இன்னும் பதில் அளிக்கவில்லை. விரைவில் இந்திய ராணுவம் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    English summary
    Pakistan claims "Indian Air Force violated Line of Control. Pakistan Air Force immediately scrambled. Indian aircraft gone back."
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X