For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணிதத்திற்கான 'நோபல்'.. ஃபீல்ட்ஸ் விருது வென்ற இந்திய வம்சாவளி மேதை அக்ஷய் வெங்கடேஷ்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பேராசிரியரின் ஃபீல்ட்ஸ் விருது சில நிமிடங்களில் திருட்டு- வீடியோ

    ரியோ டி ஜெனிரோ: இந்திய வம்சாவளியை சேர்ந்த அக்‌ஷய் வெங்கடேஷ், கணிதத்துக்கான நோபல் பரிசு என அழைக்கப்படும், இவ்வாண்டுக்கான, ஃபீல்ட்ஸ் விருதைப் பெற்றார்.

    கனடாவை சேர்ந்தவர் கணிதவியல் மேதை ஜான் சார்லஸ் ஃபீல்ட்ஸ் 1863 முதல் 1932 வரை வாழ்ந்தார். 1924ல் சர்வதேச கணிதவியலாளர்கள் அமைப்பை உருவாக்கிய இவர், கணிதத் துறையில் சாதிப்பர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

    Indian Akshay Venkatesh gets worlds most prestigious maths medal

    இதன் அடிப்படையில், கணிதத்தில் சாதனை படைக்கும் 40 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு ஃபீல்ட்ஸ் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விருது 4 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது கணிதத்திற்கான நோபல் பரிசு என்று அழைக்கப்படுகிறது.

    இந்த விருது பெறும் நால்வரில் அக்‌ஷய் வெங்கடேஷ் (36) இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். டெல்லியில் பிறந்து ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்து வாழ்ந்து வருகிறார்.

    இதுதவிர, ஈரானை சேர்ந்த காச்சர் பிர்கார், ஜெர்மனியின் பீட்டர் ஷோல்ஸ், இத்தாலியை சேர்ந்த அலிசியோ பிகலி ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதுடன் ரூ. 7.89 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது.

    வெங்கடேஷ் 2 வயதாக இருந்தபோது, குடும்பத்தார் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தனர். சிறு வயது முதலே படிப்பில் ஆர்வத்தோடு விளங்கிய இவர், மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் கணிதத்திற்கான பட்டத்தை 16 வயதில் பெற்றுள்ளார். வெங்கடேஷ் தனது 20வது வயதில் பிஹெச்டி முடித்தார். இப்போது ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    synthesis of analytic number theory, homogeneous dynamics, topology, and representation theory, பிரிவில் வெங்கடேஷுக்கு விருது கிடைத்துள்ளது.

    2014ம் ஆண்டு ஃபீல்ட்ஸ் விருதை இந்திய வம்சாவளியை சேர்ந்த, மஞ்சுள் பார்கவா பெற்றிருந்தார்.

    English summary
    Renowned Indian-Australian mathematician, Akshay Venkatesh, was announced at the International Congress of the International Mathematical Union in Rio de Janeiro as one of the four winners of the prestigious Fields Medal for the year 2018.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X