For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்வதேச போட்டி: பாதியிலேயே பழுதானதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய பீரங்கி!

சர்வதேச போர் பீரங்கி பந்தயத்தில் இந்தியாவின் போர் பீரங்கி தொழில்நுட்ப பழுது காரணமாக பாதியிலேயே நின்றதால் போட்டியிலிருந்து வெளியேறியது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

மாஸ்கோ : ரஷ்யாவில் நடந்த சர்வதேச நாடுகளிடையேயான போர் பீரங்கி போட்டியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்திய போர் பீரங்கி பாதியிலேயே வெளியேறியது.

மாஸ்கோவின் அலபினோ பகுதியில் சர்வதேச நாடுகளிடையேயான பீரங்கி போட்டி நடைபெற்றது. இதில் 19 நாடுகள் தங்கள் நாட்டு போர் பீரங்கிகளை அணிவகுத்து நிறுத்தியிருந்தன. இந்தியாவின் சார்பில் இரண்டு T-90 ரக போர் பீரங்கிகள் இந்த போட்டியில் பங்கேற்க அனுப்பப்பட்டன.

போட்டியின் துவக்க சுற்றுகளில் இந்தியா முன்னிலை வகித்துள்ளது. மற்ற நாட்டு ராணுவ பீரங்கிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் திடமான போட்டியாளராக இந்தியா முன்னேறி வந்துள்ளது. இந்நிலையில் திடீரென போர் பீரங்கியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

கோளாறு

கோளாறு

இதனை சரிசெய்ய இந்திய ராணுவ வீரர்கள் முயற்சித்தும் கோளாறு சரிசெய்யப்பட முடியவில்லை, இதனால் போட்டியிலிருந்து இந்திய போர் பீரங்கிகள் பாதியிலேயே வெளியேறும் நிலை ஏற்பட்டது. இந்திய ராணுவத்தின் ஒரு போர் பீரங்கியில் சுழலும் பேன் உடைந்ததோடு, மற்றொரு வாகனத்தில் என்ஜினில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.

 வெளியேற்றம்

வெளியேற்றம்

ரேடியேட்டரில் ஏற்பட்ட உயர் வெப்பம் காரணமாக தொடர்ந்து என்ஜினை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து போட்டியில் பங்கேற்ற சீனா, ரஷ்யா, பெலாரஸ், கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தன.

 இறுதிச்சுற்று

இறுதிச்சுற்று

ரஷ்யாவும் கஜகஸ்தானும் T-72B3 ரக டாங்கிகளுடன் போட்டியில் பங்கேற்றன. இதே போன்று பெலாரஸ் T-72, சீனா 96B ரக பீரங்கியுடன் அணிவகுத்தது. இந்தியா ரஷ்யா வடிவமைத்து தந்த T-90 மெயில் பேட்டில் டாங்கியுடன் பங்கேற்றுள்ளது. கடந்த காலங்களில் இந்தியா இந்த போட்டிகளல் T-72 ரக டாங்கிகளுடன் பங்கேற்று, தங்களது படைத் திறனை வெளிப்படுத்தியுள்ளது.

 ரஷ்யா முதலிடம்

ரஷ்யா முதலிடம்

இறுதிச் சுற்றில் மோதிய நாடுகளில் ரஷ்யாவின் ராணுவ வாகனம் முதலிடம் பெற்றுள்ளது. பந்தய தூரத்தை 1 மணி நேரம் 30 விநாடிகள் 43 நொடிகளில் கடந்து வெற்றி பெற்றுள்ளது. கஜகஸ்தான் இரண்டாவது இடத்தையும் சீனா மூன்றாவது இடத்தையும், பெலாரஸ் 4வது இடத்தையும் பெற்றுள்ளதாக போட்டியாளர்கள் அறிவித்துள்ளனர்.

English summary
The Indian army, which was taking part in Moscow's international Tank Biathlon, has been knocked out of the competition after both of its T-90 battle tanks broke down faced mechanical problems.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X