For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு பதக்கம் கூட பெறாமல் வெறுங்கையுடன் திரும்பிய இந்திய தடகள அணி

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் கலந்து கொண்டு இந்திய அணி பதக்கங்கள் எதுவும் வெல்லாமல் வெறுங்கையுடன் திரும்பியுள்ளனர் இந்திய அணியினர்.

32 ஆண்டு கால உலக தடகள போட்டி வரலாற்றில் இந்தியா இதுவரை ஒரே ஒரு பதக்கம் அதாவது 2003 ஆம் ஆண்டு நீளம் தாண்டுதலில் அஞ்சு ஜார்ஜுக்கு வெண்கலம் பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது..

பெரும்பாலும் பதக்கமின்றி வெறுங்கையுடன் தாயகம் திரும்புவது தான் இந்திய அணியின் வாடிக்கையாகும்.

இம்முறையும் அந்த சோகம் தொடருகிறது. 17 பேர் களம் இறங்கிய இந்திய குழுவில் அனைவரும் வழக்கம் போல் ஏமாற்றி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக கென்யா 7 தங்கம் அடங்கலாக 16 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்திற்கு வந்துள்ள ஜமைக்கா 7 தங்கம் அடங்கலாக 12 பதக்கங்களை வென்றுள்ளது.

அமெரிக்கா 6 தங்கம், 6 வெள்ளி அடங்கலாக 18 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Indian athletes continued their disappointing performance in the World Championships.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X