For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடிஜி எங்களை காப்பாற்றுங்கள்.. வீடு கொண்டு போய் சேருங்கள்.. ஜப்பான் கப்பலில் இந்தியர்கள் வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடிஜி எங்களை காப்பாற்றுங்கள்.. வீடு கொண்டு போய் சேருங்கள்.. ஜப்பான் கப்பலில் இந்தியர்கள் - வீடியோ

    டோக்கியோ: பிரதமர் மோடி அவர்களே எங்களை காப்பாற்றுங்கள் என ஜப்பான் கப்பலில் உள்ள இந்தியர்கள் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.

    கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி 900-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் சார்ஸை விட மோசமாக பரவி உயிர் இழப்புகளை ஏற்படுத்துகிறது.

    இதனால் சீனாவிலிருந்து வரும் பொருட்களையும் சுற்றுலா பயணிகளையும் பெரும்பாலான நாடுகள் தடை விதித்துள்ளன.

    கொரோனா

    கொரோனா

    இந்த நிலையில் ஹாங்காங்கிலிருந்து 3700-க்கும் மேற்பட்டோருடன் ஜப்பான் சென்று கொண்டிருந்தது. கொரோனா பீதியால் அந்த கப்பல் யோக்கோஹாமா துறைமுகம் அருகே நடுக்கடலில் பிப்ரவரி 5-ஆம் தேதி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் உள்ள 64 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த 64 பேரும் தனிமைப்படுத்தப்படாமல் ஒரே கப்பலில் இருப்பது கொரோனா வைரஸ் பாதிப்பில்லாதோருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    மம்தா பானர்ஜி

    மம்தா பானர்ஜி

    இதனால் சீனாவில் உள்ள வுகான் நகரில் இந்தியர்களை மீட்டது போல் கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லாத 200-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்குமாறு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சமையல் கலைஞர் பினய் குமார் சர்கார், பிரதமர் நரேந்திர மோடிக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் கோரிக்கை விடுத்திருந்தார்.

    ஜப்பான் கப்பல்

    ஜப்பான் கப்பல்

    இந்த நிலையில் சர்கார் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஜப்பான் கப்பலில் இருந்து இந்திய அரசும் ஐநாவும் மீட்க வேண்டும். கொரோனா வைரஸ் குறித்து எங்கள் 5 பேருக்கு சோதனை செய்யவில்லை. எப்படியாவது எவ்வளவு சீக்கரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எங்களை காப்பாற்றுங்கள். எங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது?

    வீடுகள்

    வீடுகள்

    இந்திய அரசுக்கு நான் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். மோடி ஜி எங்களை அந்த கப்பலில் இருந்து மீட்டு பாதுகாப்பாக எங்கள் வீடுகளுக்கு அனுப்பி வையுங்கள் என அந்த வீடியோவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வீடியோவில் 5 ஆண்கள் வெள்ளை நிறத்திலான முகமூடிகளை அணிந்திருந்தனர். சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

    English summary
    In a video Indian crew in Japan Ship asks Indian Government and UN to rescue them and bring them to home safely.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X