For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூடான் தீவிபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்து அறிய அவசர எண் அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    சூடான் நாட்டு ஓடு ஆலையில் பயங்கர தீ விபத்து.. 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு

    கார்தும் (சூடான்): சூடான் தீவிபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்து தகவல் அறிய இந்திய தூதரகம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அவசர எண்ணை அறிவித்துள்ளது.

    சூடான் தலைநகர் கார்துமில் செராமிக் ஓடுகள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நேற்று கேஸ் டேங்கர் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

    Indian embassy gives 24 hour emergency numbers to get any info about tanker blast

    இதில் ஆலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. 200-க்கும் அதிகமானோர் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் என மொத்தம் 23 பேர் பலியாகிவிட்டனர்.

    மேலும் சிலர் காணாமல் போய் உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் இந்தியர்கள் பலரின் உடல்நிலை மோசமான நிலையிலும் அவர்கள் லேசான காயமடைந்த நிலையிலும் உள்ளது.

    இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள், மாயமானவர்கள் குறித்த தகவல்களை பெற +249-921917471 என்ற 24 மணி நேரமும் இயங்கும் அவசர எண்ணை கார்துமில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களையும் தூதரகம் வெளியிட்டுள்ளது.

    இந்த விபத்தில் காயமடைந்த தமிழர்களான ஜெயக்குமார், முகமது சலீம் ஆகியோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன். ராஜசேகர், வெங்கடாசலம் ஆகியோர் காணாமல் போய்விட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    இவர்களில் ராஜசேகர் இறந்துவிட்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். மேலும் தனது கணவரின் உடலை மீட்டு தரும்படி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை கடிதம் அளித்துள்ளார்.

    English summary
    Indian embassy in Khartoum gives 24 hour emergency number to get any information about tanker blast in which 18 indians lost their life.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X