For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்வமே எமனாக மாறிய விபரீதம்.. குவைத் ஏர்போர்ட்டில் சோகம்.. விமான சக்கரம் ஏறி இந்திய ஊழியர் பலி

Google Oneindia Tamil News

Recommended Video

    குவைத் ஏர்போர்ட்டில் விமான சக்கரம் ஏறி இந்திய ஊழியர் பலி | நிலத்தகராறில் டீ மாஸ்டர் வெட்டிக்கொலை

    குவைத்: குவைத் விமான நிலையத்தில் விமானம் நகர்ந்து செல்வதை அருகிலிலிருந்து வேடிக்கை பார்த்த இந்திய ஊழியர் ஒருவர், அதன் சக்கரத்திலேயே சிக்குண்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குவைத் ஏர்வேஸின் தொழில்நுட்பப் பிரிவு பணியாளரான ஆனந்த் ராமச்சந்திரன் கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். குவைத் சர்வதேச விமான நிலையத்தில், குவைத் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 777 விமானம் ஒன்று 4-வது முனையத்தில் நின்று கொண்டிருந்தது.

    Indian employee who saw the flight Departure in Kuwait airport .. Stuck at the wheel of death

    பயணிகள் யாருமின்றி காலியாக நின்ற அந்த போயிங் 777 விமானத்தை, அதன் இருப்பிடத்தில் நிறுத்த விமானி தயாராகி கொண்டிருந்தார். அப்போது அந்த விமானத்தின் அருகில் சென்ற ஆனந்த் ராமச்சந்திரன், விமானம் புறப்பட்டு செல்லப்போவதை மிகுந்த ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தார்.

    ஒதுக்கிவைத்த கோபத்தில் ஈரான்.. 'எங்கயாச்சும் தொட்ட... நீ கெட்ட' படையை அனுப்பி எச்சரிக்கும் அமெரிக்கா ஒதுக்கிவைத்த கோபத்தில் ஈரான்.. 'எங்கயாச்சும் தொட்ட... நீ கெட்ட' படையை அனுப்பி எச்சரிக்கும் அமெரிக்கா

    அப்போது அவர் அறியவில்லை. அவரது ஆர்வ மிகுதியே அவருக்கு எமனாக போகிறதென்று. விமானி குறிப்பிட்ட போயிங் விமானத்தை சீரான வேகத்தில் இயக்கி அதன் இருப்பிடத்திற்கு கொண்ட செல்ல முயன்றார்.

    அப்போது தான் கணநேரத்தில் அந்த விபரீதம் நிகழ்ந்தது. விமானத்துக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஆனந்த் ராமச்சந்திரன் மீது, போயிங் விமான சக்கரம் பலமாகி மோதியது. இதனால் நிலைகுலைந்த அவர் மீது விமானத்தின் சக்கரம் ஏறிவிட்டது.

    இதனால் அவர் துடிதுடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்தால் ஆனந்த் ராமச்சந்திரனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்

    விபத்தில் உயிரிழந்த ஆனந்த் ராமச்சந்திரனின் உடலை சொந்த ஊருக்குக்கு கொண்டு வரும் முயற்சியில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் முடிவில் தான் எப்படி விபத்து நடந்தது என்ற முழுவிவரம் தெரிய வரும் என குவைத் ஏர்வேஸ் நிறுவனம் கூறியுள்ளது.

    English summary
    An Indian employee, who has seen the move from the plane moving to Kuwait airport, has caused a tragedy in the incident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X