For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அலுவலக ரகசியங்களைத் திருடிய இந்திய என்ஜினியருக்கு 18 மாத சிறை: அமெரிக்க கோர்ட் உத்தரவு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பிரபல மருத்துவ கம்பெனிகளின் ரகசியங்களைத் திருடியதாக இந்திய என்ஜினீயருக்கு அமெரிக்க நீதிமன்றம் 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஜியாண்ட் பெக்டான் டிக்கின்சன் மெடிக்கல் டெக்னாலஜி மற்றும் மற்றொரு மெடிக்கல் கம்பெனியின் ரகசியங்களைக் கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப் பட்டார் கேடன் மனியர் (38) என்ற இந்திய என்ஜினியர்.

இவர் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில் உள்ள மருத்துவ நிறுவனத்திலும், அதனைத் தொடர்ந்து கடந்த 2012ம் ஆண்டு முதல் 2013 மே மாதம் வரை பிராங்க்ளின் லேக்ஸ்ல் உள்ள பி.டி. மருத்துவக் கம்பெனியிலும் பணி புரிந்துள்ளார்.

இந்த இரண்டு நிறுவனங்களில் பணி புரிந்த போது, கம்பெனியின் ரகசியங்களை மனியர் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அலுவலகக் கம்யூட்டரிலிருந்த ரகசியங்களைத் திருடி அவற்றைத் தனது பெர்சனல் மெயில் மூலமாக அனுப்பியுள்ளார் என்றுக் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விசாரணையின் முடிவில் மனியர் மீதான குற்றம் நிரூபிக்கப் பட்டதால், அவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
An Indian engineer has been sentenced to 18 months in prison followed by deportation for stealing trade secrets from medical technology giant Becton Dickinson and another New Jersey company.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X