For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய தொழில் முனைவோர்களால் அடுத்த கூகுளை உருவாக்க முடியும்: ஸ்மித் நம்பிக்கை

Google Oneindia Tamil News

Indian entrepreneurs can build the next Google, says Eric Schmidt
வாஷிங்டன்: இந்தியத் தொழில் முனைவோருக்கு அடுத்த கூகுளை உருவாக்கும் அளவிற்கு வல்லமை உள்ளது என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் கூகுள் நிறுவனத்தின் செயற்குழு தலைவர் எரிக் ஷிமித்.

இணையதளம் பயன் படுத்துபவர்கள் அனைவருக்கும் கூகுள் பற்றித் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. அந்தளவிற்கு இணையத் தள பயனாளிகளின் நண்பன் கூகுள். உலகம் முழுவதும் கூகுளை லட்சக் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவின் தொழில்முனைவோர்களால் நிச்சயமாக அடுத்த கூகுளை உருவாக்கும் சாத்தியம் இருப்பதாக கூகுள் நிறுவனத்தின் செயற்குழு தலைவர் எரிக் ஷிமித் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘இந்தியாவில் உள்ள தொழில்முனைவோரால் மற்றுமொரு கூகுளை நிச்சயமாக உருவாக்க முடியும். அவ்வாறு அது சாத்தியமானால், இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய தேவை இருக்காது.

இது இனி வரும் சில வருடக்களுக்குள்ளாகவே நிகழ வாய்ப்புள்ளது. இந்திய பொறியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் முதலில் இந்தியா இணையத்தில் மேற்கொள்ளும் பிரச்சினைகளக் களைவதற்கான தீர்வுகளை கண்டறிந்து, பின்னர் அதனை வெளிநாடுகளுக்கும் அனுப்ப வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வசிக்கும் 1.2 மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட 600 மில்லியன் மக்கள் மொபைல் போன் வைத்துள்ளார்கள். அவர்களில் சுமார் 150 மில்லியன் மக்கள் மொபைல் போனில் இணையத்தை பயன் படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப் பட்ட கணகீட்டின் படி, இந்திய மக்கள் தொகையில் மொத்தம் 11 சதவீதமாக இருந்த இணையப் பயன்பாடு, தற்போது 70 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
India's entrepreneurial innovators have the potential to build the "next Google" if the country "plays its cards right" and ensures Internet access for millions of its citizens, Google executive chairman Eric Schmidt has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X