For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    சவுதியிலிருந்து குடும்பத்தை இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்!

    சவுதி: சவுதி அரேபியாவில் பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அங்கிருந்து வெளியேற்றும் போக்கு அதிகரித்துள்ளது.

    இந்தியர்கள் கணிசமாக சவுதி அரேபியாவில் தொழில் நிமித்தமாகவும், பணி காரணங்களுக்காகவும் வசித்து வருகிறார்கள்.

    இவர்களில் கணிசமானோர் தங்கள் குடும்பத்தோடு தங்கியுள்ளனர். ஆனால், சவுதி அரேபிய அரசு எடுத்த ஒரு முடிவு இப்போது குடும்பஸ்தர்களுக்கு பெரும் சுமையாகியுள்ளது.

    மக்கள் தொகை அதிகரிப்பு

    மக்கள் தொகை அதிகரிப்பு

    சவுதி அரேபியாவில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், பல்வேறு வகையான சேவைகளுக்கும் வரி விதிப்பை அதிகரித்துள்ளது. வருடாந்திர குடியிருப்பு கட்டணம் என்பது இதுவரை ஒரு குடும்பத்திற்கானதாக இருந்தது. இப்போது அதை தனி நபர்களுக்கானதாக மாற்றியுள்ளது சவுதி அரசு.

    குடும்பஸ்தர்கள் சுமை

    குடும்பஸ்தர்கள் சுமை

    குடும்பம் என்பதற்கு பதிலாக ஒவ்வொரு நபர்கள் மீதும் வரி விதிப்பு விதிக்கப்பட்டுள்ளதால், குடும்பஸ்தர்களுக்கு சுமை அதிகரித்துள்ளது. இதனால் மனைவி, குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்ப துவங்கியுள்ளனர். தெலுங்கானா மக்கள் தாயகம் திரும்பி வருவதால் ஹைதராபாத்திலுள்ள பள்ளிகளில் விண்ணப்பங்கள் அதிக அளவுக்கு விற்று தீர்ந்துள்ளதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு

    ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு

    குடும்ப உறுப்பினர் மீதான கட்டணம் எனபது தற்போது மாதம் 100 ரியாலாக உள்ளது. அது ஜூலை 1ம் தேதி முதல் 200 ரியாலாக உயர்த்தப்பட உள்ளது. அடுத்த வருடம் ஜூலை 1ம் தேதி இந்த தொகை 300 ரியாலாகவும், 2020ம் ஆண்டு, ஜூலை 1ம் தேதி முதல் அது 400 ரியாலாகவும் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்குப்படி பார்த்தால், நான்கு பேரை கொண்ட ஒரு குடும்பம், ஆண்டுக்கு சராசரியாக ரூ.1.72 லட்சம் செலவிட வேண்டியிருக்கும்.

    சிபிஎஸ்இ முதல் சாய்ஸ்

    சிபிஎஸ்இ முதல் சாய்ஸ்

    இதையடுத்துதான், சவுதியில் உள்ள இந்தியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இந்தியாவுக்கே திருப்பியனுப்பி வருகிறார்கள். இந்தியா வரும் குடும்பத்தார், குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ பாடத் திட்டம் உள்ள பள்ளிகளில், விண்ணப்பித்து வருகிறார்கள். இதற்கு காரணம், சவுதி உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளில் சிபிஎஸ்இ வகையிலான பாடத் திட்டத்தில் கல்வி கற்று கொடுப்பதுதான் ஆகும்.

    English summary
    There are concerns that the trickle of Indian workers sending away their families from Saudi Arabia can turn into a tide into the near future.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X