For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்

Google Oneindia Tamil News

லண்டன்: லண்டனில் பாகிஸ்தான் போராட்டக்காரர்கள் இந்திய தேசிய கொடியை மிதித்து, கிழித்து எதிர்ப்பு தெரிவித்த போது, இந்தியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஓடிச்சென்று இந்திய தேசியக்கொடியை பறிமுதல் செய்தார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த பத்திரிக்கையாளரை பாராட்டி உள்ளார்கள்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் பல்வேறு வகையில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக கடைபிடிக்கப் போவதாக அறிவித்து அதன்படி அன்றைய தினம் பாகிஸ்தான் செயல்பட்டது.

indian Journalist Poonam Joshi saves indian national flag in london from Pro-Pak & Pro-Khalistan protests

இந்நிலையில் காஷ்மீர் பிரச்சனை சுட்டிக்காட்டி, இந்தியாவின் சுதந்திர தினத்தன்று லண்டனில் இந்திய தூதரம் முன்பாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானைச் சேர்ந்த பலரும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், இந்திய தேசியக்கொடியை கிழித்தும், காலால் மிதித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனைக் கண்ட இந்தியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஓடிச்சென்று கீழே கிடந்த இந்திய தேசியக் கொடியை எடுத்தார். அத்துடன் பாகிஸ்தான் போராட்டக்காரர்களிடம் இருந்த தேசிய கொடியை பறித்தார். அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து பேசிய பெண் பத்திரிகையாளர், பூணம் ஜோசி, கூறுகையில், தேசியக்கொடி அவமதிக்கப்பட்டதும், நான் போராட்டம் நடைபெறும் பாகிஸ்தானின் பக்கம் சென்று தரையில் கிடந்த தேசியக் கொடியின் ஒரு பகுதியை எடுத்தேன். அத்துடன் தேசிய கொடியையும் போராட்டகாரரிடம் இருந்து பறித்தேன் இவ்வளவு இழிவான கேவலாமான போராட்டத்தை நான் கண்டதில்லை என்றார்.

இதனிடையே போராட்ட கூட்டத்துக்குள்ளேயே புகுந்து இந்திய தேசியக் கொடியை பறிமுதல் செய்து காப்பாற்றிய பத்திரிகையாளர் பூணம் ஜோசியை சமூக வலைதளத்தில் பலரும் புகழ்ந்துள்ளனர்.

English summary
Journalist Poonam Joshi covering the Indian Independence Day celebrations outside Indian High Commission in London,where Pro-Pak & Pro-Khalistan protests were also underway, snatches 2 torn parts of tricolour from Khalistan supporters who had seized it from Indians.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X