For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் அதிர்ச்சி - மகள், மாமியரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்தியர்

இந்திய வம்சாவளி நபர் ஒருவர் தனது மகள் மற்றும் மாமியாரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தனது 14 வயது மகள் மற்றும் மாமியாரை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து நியூயார்க் மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவைச் சேர்ந்த பூபிந்தர் சிங், 57 அமெரிக்காவின் அல்பானி நகர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு பூபிந்தர் சிங் தனது வீட்டில் வைத்து மகள் ஜஸ்லீன் கவுர் 14 மற்றும் அவரது மாமியார் மன்ஜீத் கவுர் ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, பின்னர் தன் மீதும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.

இந்தோனேசியாவை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 67 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் படுகாயம்இந்தோனேசியாவை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 67 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் படுகாயம்

Indian origin man kills daughter, mother-in-law and kills himself

துப்பாக்கிச் சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டில் இருந்து காப்பாற்றுவதற்காக வந்த ராஷ்பால் கவுர் என்ற பெண்ணின் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. அவர் தற்போது படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து நியூயார்க் மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. சாதாரண குடும்ப பிரச்சினைகளுக்கு கூட கொலை வரை செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A man of Indian descent living in the United States has shot dead his 14-year-old daughter and mother-in-law and committed suicide. New York State Police are conducting a serious investigation into the cause of the incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X