For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவர்தான் முக்கியம்.. ஜஸ்டின் ட்ரூடோ நம்பி இருக்கும் இந்தியர்.. கனடாவின் கிங் மேக்கராக மாறும் சிங்!

கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்றால் இந்திய வம்சாவளி எம்பி ஒருவரின் ஆதரவு தேவை.

Google Oneindia Tamil News

Recommended Video

    Canada Election: Justin Trudeau wins minority government?

    ஓட்டவா: கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்றால் இந்திய வம்சாவளி எம்பி ஒருவரின் ஆதரவு தேவை.

    கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா லிபரல் கட்சி வெற்றிபெற்றுள்ளது. ஆனால் அந்த கட்சி முழு பெரும்பான்மை பெறவில்லை.

    இதனால் விரைவில் மைனாரிட்டி ஆட்சியை அமைக்க பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முடிவு செய்துள்ளார். இது கனடாவில் இருக்கும் இந்தியர்களையும், தமிழர்களையும் சந்தோசத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

    தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மாதத்திற்கு 30 தபால்கள் செல்லும்.. தபால் வட்டாரங்கள் தகவல்தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மாதத்திற்கு 30 தபால்கள் செல்லும்.. தபால் வட்டாரங்கள் தகவல்

     தேர்தல் எப்படி

    தேர்தல் எப்படி

    அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களில் வென்றது. அதேபோல் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களில் வென்றது. பிளாக் குயோபிகாய்ஸ் கட்சி 32 இடங்களையும், நியூ டெமோக்ரடிக் கட்சி 24 இடங்களையும், கிரீன் கட்சி 3 இடங்களையும் வென்றது.

    மொத்தம் எத்தனை

    மொத்தம் எத்தனை

    கனடாவில் மொத்தம் 388 எம்பிக்கள் உள்ளனர். இதில் மெஜாரிட்டி பெற 170 இடங்களில் குறைந்தது வெல்ல வேண்டும். இந்த நிலையில் 121 இடங்களில் மட்டும் வென்றுள்ள ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தனியாக ஆட்சி அமைக்க முடியாது.

    யார் உதவி

    யார் உதவி

    அதேபோல் எதிர்க்கட்சியும் தனியாக ஆட்சி அமைக்க முடியாது. ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பிளாக் குயோபிகாய்ஸ் கட்சி ஆதரவு அளிக்காது. அதனால் தற்போது ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சி நியூ டெமோக்ரடிக் கட்சியை மட்டும்தான் நம்பி இருக்கிறது.

    இந்தியர்தான்

    இந்தியர்தான்

    நியூ டெமோக்ரடிக் கட்சி இந்த தேர்தலில் மொத்தம் 24 இடங்களை வென்றது. இந்த கட்சிதான் தற்போது ட்ரூடோவிற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தர முடிவு செய்துள்ளது. இதன் தற்போதைய தலைவர் ஒரு இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜக்மீத் சிங் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்தான் இப்போது நியூ டெமோக்ரடிக் கட்சியின் தலைவராக இருக்கிறார்.

    தலைமை விதி

    தலைமை விதி

    இவர்தான் தற்போது கனடாவின் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார். நியூ டெமோக்ரடிக் கட்சியில் தமிழர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல நாட்டில் இருந்து அகதிகளாக குடியேறி மக்கள்தான் இந்த கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளனர். தற்போது இவர்கள்தான் அங்கு ஆட்சியை நிர்ணயிக்கும் தலைமையாக மாறியுள்ளனர்.

    English summary
    Indian Origin Singh is going to be the kingmaker in Canada for Justin Trudeau.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X