For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் வலிமையான 50 பயண ஆவணங்கள்... இந்திய பாஸ்போர்ட்க்கு 48வது இடம்!

Google Oneindia Tamil News

லண்டன்: உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சர்வேயின் முடிவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகின் வலிமையான 50 பயண ஆவணங்களின் பட்டியலில் இந்திய நாட்டின் பாஸ்போர்ட்டுக்கு 48 ஆவது இடம் கிடைத்துள்ளது.

இந்த உலகில் நாடு கடந்து செல்லும் ஒருவரின் அடையாளமாக இருப்பது அவரது பாஸ்போர்ட்டே. அத்தோடு விசாவும்.

Indian Passport Ranked 48 Out of 50 Most Powerful Travel Document

இவற்றை அடிப்படையாகக் கொண்டு உலகின் தலைசிறந்த 50 நாடுகளின் பாஸ்போர்ட்டை ஜெர்மனியைச் சேர்ந்த "கோ யூரோ" என்ற பயண ஒப்பீட்டு இணையதளம் பட்டியலிட்டுள்ளது.

52 இலவச-விசா நாடுகள், 1510 ரூபாய் விண்ணப்ப கட்டனத்தில் விண்ணப்பித்த 87 மணி நேரத்திற்குள் கிடைக்கும் இந்திய பாஸ்போர்ட்டுக்கு இந்த பட்டியலின் இறுதியில் அதாவது 48 ஆவது இடம் கிடைத்துள்ளது.

174 இலவச விசா நாடுகள், 2700 ரூபாய் விண்ணப்ப கட்டனத்தில் விண்ணப்பித்த ஒரு மணி நேரத்திற்குள் கிடைக்கும் சுவீடன் நாட்டு பாஸ்போர்ட் முதல் இடம் கிடைத்துள்ளது. பின்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.

English summary
The Indian passport has been ranked 48th in a list of 50 most powerful travel document in the world, according to a global survey topped by Sweden.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X