For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வருகிறது அணு எரிபொருள்.. ரஷ்யாவில் கூடங்குளம் பற்றி ஆலோசனை.. இனி என்னவெல்லாம் நடக்கும்?

இந்தியாவில் அணு எரிபொருள் குழாய்கள் அமைப்பது தொடர்பாகவும், கூடங்குளம் அணு உலை தொடர்பாகவும் நேற்று ரஷ்யாவில் ஆலோசனை நடத்தப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Russia opens the gate of the new sea route to Chennai

    மாஸ்கோ: இந்தியாவில் அணு எரிபொருள் குழாய்கள் அமைப்பது தொடர்பாகவும், கூடங்குளம் அணு உலை தொடர்பாகவும் நேற்று ரஷ்யாவில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    பிரதமர் மோடி தற்போது ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அவர் ரஷ்யா சென்று இருக்கிறார். இன்றோடு அவர் பயணம் முடிவடைகிறது.

    நேற்று காலை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் மோடி சந்தித்தார். இதில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையில் எரிசக்தி துறையில் புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டது.

    பெருங்குடி ரோட்டோரம்.. பந்தா இல்லை.. அலட்டல் இல்லை.. ஆச்சரியப்பட்ட மக்கள்.. அட நம்ம தமிழச்சி!பெருங்குடி ரோட்டோரம்.. பந்தா இல்லை.. அலட்டல் இல்லை.. ஆச்சரியப்பட்ட மக்கள்.. அட நம்ம தமிழச்சி!

    அணு எரிபொருள்

    அணு எரிபொருள்

    இந்த நிலையில் நேற்று இவர்கள் இருவரும் நடத்திய கூட்டத்தில் இந்தியாவில் அணு எரிபொருள் குழாய்கள் அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேக் இன் இந்தியா திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் அணு எரிபொருள் குழாய்களை ரஷ்யாவுடன் இணைந்து அமைக்க ஆலோசிக்கப்ட்டுள்ளது. ரஷ்யாவின் முக்கிய அமைச்சரவை உறுப்பினர்கள் மட்டும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.

    என்ன குழாய்கள்

    என்ன குழாய்கள்

    ரஷ்ய அணுசக்தி துறையின் துணை தலைவர் லெக் கிரிகோரியாவ் சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டம் வேகமாக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த திட்டத்தின் அடிப்படையில் இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து இந்தியாவில் அணு எரிபொருள் குழாய்களை ரஷ்யா அமைக்க வேண்டும். இது இரண்டு நாட்டிற்கும் பயனளிக்கும் என்று குறிப்பிட்டார்.

    யார் கொடுத்த அடியா

    யார் கொடுத்த அடியா

    அவர் அப்போது கொடுத்த ஐடியாவில் அடிப்படையில் நேற்று இந்த ஆலோசனை நடந்தது. அதன்படி, அணு எரிபொருள் குழாய்களை இந்தியாவில் அமைக்க இதில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப அணு உலைகளுக்கு அருகில் இந்த குழாய்கள் அமைக்கப்படும். இதில் முதற்கட்டமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.

    கூடங்குளம்

    கூடங்குளம்

    அதன்படி இந்த அணு எரிபொருள் குழாய்கள் கூடங்குளத்தில் அமைக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இன்னும் சில நாட்களில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகள் இயங்க உள்ளது. அதனபின் 5 மற்றும் 6வது அணு உலைகள் கூடங்குளத்தில் அமைக்கப்படும்.

    எவ்வளவு

    எவ்வளவு

    எல்லாம் 1000 மெகா வாட் மின்சாரத்தை தயாரிக்கும் அளவிற்கு உருவாக்கப்படும். இந்தியா முழுக்க மொத்தம் 12 அணு உலைகள் ரஷ்யா மூலம் இப்படி அமைக்கப்படும். அனைத்தும் 1000 மெகா வாட் மின்சாரத்தை உருவாக்கும். இந்த பகுதிகளில் எல்லாம் அணு எரிபொருள் குழாய்கள் அமைக்கப்படும். இதை ரஷ்யா நேரடியாக செய்யாமல் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செய்ய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Indian- Russia may join together to produce Nuclear Fuel: Kudankulam may get fuel rods soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X