For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே கஷ்டமப்பா.. யோகாசனம் செய்ய முடியல..மோடியிடம் மனம் திறந்த ரஷ்ய அதிபர் புதின்..

Google Oneindia Tamil News

மாஸ்கோ: பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், யோகாசனம் கஷ்டமான பயிற்சி போல் தோன்றியதால் அதை செய்ய தான் செய்ய முயற்சித்ததில்லை என தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து கடந்த திங்கட்கிழமை உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி, அதன்பின்பு 2 நாள் பயணமாக கஜகஸ்தான் சென்றார். கஜகஸ்தான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த அவர் இன்று (புதன்கிழமை) ரஷ்யா சென்றடைந்தார். ரஷ்யாவின் உபா நகர் விமான நிலையத்தில் அவருக்கு அந்நாட்டு உயரதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

modi putin

நாளை உபா நகரில் நடைபெற இருக்கும் பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்கும் மோடியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இந்தியா-ரஷ்யா இடையிலான நல்லுறவை மேம்படுத்த மோடியிடம் புதின் விருப்பம் தெரிவித்தார்.

முன்னதாக, விமான நிலையத்தில் தனக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்கு புதினுக்கு நன்றி தெரிவித்த மோடி, 6 நாடுகளை கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவும் இணைய உறுதுணையாக இருந்தமைக்காகவும், இதுதொடர்பான தகவலை முன்னர் தன்னிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தமைக்காகவும் நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார்.

மேலும் சர்வதேச யோகா தினத்தை ரஷ்யாவின் பல முக்கிய நகரங்களில் கொண்டாட ஆதரவு அளித்ததற்காக நன்றி தெரிவித்து கொண்ட மோடி, யோகாசனத்தின் மூலம் உலகின் புதிய தலைமுறையினர் பரிபூரண ஆரோக்கியத்தை பெற முடியும் எனவும் புதினிடம் சுட்டிக் காட்டினார்.

இதற்கு பதில் அளித்த விளாடிமிர் புதின், தனக்கு யோகாசனம் செய்ய தெரியாது என்றும், மக்கள் யோகாசனம் செய்வதை பார்க்கும்போது அது கஷ்டமான பயிற்சி போல் தோன்றியதால், தான் யோகாசனம் செய்ய முயற்சித்ததில்லை எனவும் வேடிக்கையாக தெரிவித்தார்.

English summary
Prime Minister Narendra Modi talking about yoga in a meeting with, Russian President Vladimir Putin said the ancient Indian spiritual practice "looks difficult" and that is why he has not tried it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X