For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனடாவில் தமிழக மாணவி மீது கத்திக் குத்து.. படுகாயம்.. அமைச்சர் ஜெய்சங்கர் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

டொராண்டோ : கனடாவின் டொரொண்டோவில் அடையாளம் தெரியாத தாக்குதலால் குத்தப்பட்ட இந்திய மாணவி குடும்பத்திற்கு விசா ஏற்பாடு செய்யுமாறு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில், "கனடாவின் டொரொண்டோவில் உள்ள இந்திய மாணவி ரேச்சல் ஆல்பர்ட் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன்.

அவரது குடும்பத்தின் விசாவிற்கு உதவுமாறு நான் வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.. குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக எங்களை +91 9873983884 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் "என்று தெரிவித்துள்ளார்.

 தமிழக மாணவி

தமிழக மாணவி

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த ஆல்பர்ட் என்பவரின் இரண்டாவது மகள் ரேச்சல். குன்னூரில் பள்ளிக் கல்வியை படித்து முடித்தார். பெங்களூருவில் இளநிலை பட்டப்படிப்பை பெற்ற பிறகு, சுமார் மூன்றாண்டுகள் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்..

முதுகலைப்படிப்பு

முதுகலைப்படிப்பு

படிப்பில் சிறந்து விளங்கிய அவருக்கு, கனடாவின் டொரொண்டோவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் முழு கல்வி உதவித்தொகையுடன் பட்ட மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால், அங்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் முதுகலைப்படிப்பு (Supply chain management) பயின்று வருகிறார்.

மாணவி மீது தாக்குதல்

இந்நிலையில், உள்ளூர் நேரப்படி, கடந்த புதன் கிழமை அன்று இரவு 10 மணியளவில் டொரொண்டோவில் உள்ள யார்க் பல்கலைக்கழக வளாகம் அருகே அடையாளம் தெரியாத நபர் மாணவி ரேச்சல் ஆல்பர்ட் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்தார். பின்னர் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இருந்த போதிலும்ட அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்து வருகிறார். இந்த தகவலை கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

20 வயது நபர்

டொரொன்டோ காவல்துறை வெளியிட்ட ஒரு ட்வீட்டில் சந்தேக நபருக்கு 20 வயதிற்குள் இருக்கும் என்றும ஐந்து அடி-ஒன்பது முதல் ஐந்து அடி-பதினொன்று அங்குலம் உள்ள ஆசியாவைச் சேர்ந்தவர் எனறும் விவரித்துள்ளனர். இந்த வழக்கு குறித்து தகவலை பெற போலீஸ் அதிகாரிகளின் தொலைபேசி எண்களையும் ட்வீட் செய்துள்ளனர்.

English summary
Indian student stabbed by an unidentified assailant in Canada’s Toronto: The 23-year-old, who hails from Tamil Nadu, sustained stab wounds to her neck during the assaultThe 23-year-old, who hails from Tamil Nadu, sustained stab wounds to her neck during the assault.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X