For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியர்கள் பிரேசில் செல்ல இனி விசா வாங்க தேவையில்லை: பிரேசில் அதிபர் சூப்பர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

ஸா பாலோ, பிரேசில்: இந்தியர்கள் மற்றும் சீனர்கள் இனி பிரேசில் வர விசா வாங்க தேவையில்லை என பிரேசில் அதிபர் ஜயர் போல்சொனாரோ அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரேசில் அதிபராக பதவி ஏற்றவர் ஜயர் போல்சொனாரோ. இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் விசா விதிமுறைகளை வளர்ந்த நாடுகளை சேர்ந்தவர்களுக்கு எளிதாக்கினார். பிரேசில் நாட்டின் சுற்றுலா, வர்த்தகம் வளரும் என்ற நோக்கத்தில் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்

Indians Will No Longer Require Visas To Visit Brazil, Says President Jair Bolsonaro

இதன்படி இந்த ஆண்டில் இருந்து அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள், பிரேசில் நாட்டுக்கு சுற்றுலா சென்றாலும், தொழில்-வர்த்தக நோக்கங்களுக்காக சென்றாலும் விசா தேவையில்லை.

உருவானது உருவானது "கியார்" புயல்.. தமிழகத்துக்கு ஆபத்து இல்லை.. கர்நாடக கடலோரத்துக்கு கன மழை எச்சரிக்கை

தற்போது விசா விதியில் இருந்து இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் விலக்கு அளிக்கப்படுவதாக பிரேசில் அதிபர் ஜயர் போல்சொனாரோ அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

எனவே இனி இந்தியா, சீனாவை சேர்ந்தவர்கள் சுற்றுலா மற்றும் வியாபார ரீதியாக பிரேசில் செல்வதாக இருந்தால் இனி விசா பெறத் தேவையில்லை. பாஸ்போர்ட் வைத்திருந்தாலே அனுமதிக்கப்படுவர்.

English summary
Brazilian President Jair Bolsonaro said, will drop its requirement that visiting Chinese and Indian tourists or business people obtain visas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X