For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலு கடற்கரையோரம் கன்னாபின்னாவென ஒதுங்கும் உடல்கள்!

இந்தோனேஷியாவில் நேற்று நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 400 எட்டியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்... 6 அடிக்கு உயர்ந்த கடல் அலை சுனாமி..வீடியோ

    சுலேவேசி: இந்தோனேஷியாவில் நேற்று நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 400 எட்டியுள்ளது. பல கடற்கரையோரம் அதிகளவிலான உடல்கள் கரை ஒதுங்கி வருவதால் மக்கள் மீளாத் துயரில் ஆழ்ந்துள்ளனர்.

    இந்தோனேஷியாவின் சுலேவேசியா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுலேவேசியாவின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு தொடர்ச்சியாக நிலஅதிர்வுகளும் ஏற்பட்டன.

    சுனாமி தாக்கியது

    சுனாமி தாக்கியது

    சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தோனேஷிய பேரிடர் மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை பலு நகரை சுனாமி பேரலைகள் தாக்கின. இதில் கடற்கரையோரம் இருந்த ஏராளமான வீடுகள், மசூதிகள் சேதமடைந்தன.

    சின்னாபின்னமானது

    சின்னாபின்னமானது

    பல நகரில் சுமார் 3 மீட்டர் உயரத்துக்கு எழும்பிய சுனாமி அலைகள் சுமார் 350000 மக்கள் வசிக்கும் பகுதியை தாக்கியது. இதனால் அந்நகரமே சின்னாபின்னமாகியுள்ளது.

    384 ஆக உயர்வு

    384 ஆக உயர்வு

    இந்நிலையில் நிலநடுக்கத்தால் இந்தோனேஷியாவில் ஒரே மருத்துவமனையில் 30 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    384 ஆக உயர்வு

    இந்நிலையில் நிலநடுக்கத்தால் இந்தோனேஷியாவில் ஒரே மருத்துவமனையில் 30 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கரை ஒதுங்கும் உடல்கள்

    பல கடற்கரையோரங்களில் காலை முதலே ஏராளமான உடல்கள் கரை ஒதுங்கி வருவதாக கூறப்படுகிறது. தொடந்து உடல்கள் கரை ஒதுங்கி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

    கணக்கெடுப்பு

    30000க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் சுலேவேசி தீவில் பலர் மாயமாகியிருப்பதாக கூறப்படுகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் மாயமானவர்களை கணக்கெடுக்கும் பணியை அரசு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    அச்சம்

    மேலும் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    English summary
    Indonesia Tsunami death toll increased as 384. A number of bodies are reported to be on the sidelines since the morning on the beaches of the coast.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X