For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தோனேசியாவை உலுக்கிய மோசமான நிலநடுக்கம்.. அதிரவைக்கும் வீடியோ.. என்ன நடந்தது?

இந்தோனேசியாவில் மிக மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கத்திற்கு 82 பேர் பலி...

    நிக்கோபார்: இந்தோனேசியாவில் மிக மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய அங்கு மீட்பு வேலைகள் நடந்து வருகிறது.

    இந்தோனேசியாவில் இருக்கும் மிகவும் முக்கியமான சுற்றுலாத்தளங்களில் பாலியும், லாம்பாக் நகரமும் ஒன்று. அதிக வெளிநாட்டு மக்கள் மே மாதத்தில் இருந்து டிசம்பர் வரை இந்த பகுதிக்கு சுற்றுலா வருவார்கள்.

    இந்த நிலையில் இந்த இரண்டு தீவுகளிலும் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே பாலியில் எரிமலை வெடித்துக்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    எப்போது ஏற்பட்டது

    நேற்று மாலைக்கு பின் அங்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் முதல் நிலநடுக்கம் 7 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் 15 கிமீ வரை உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. பாலி, லாம்பாக் ஆகிய இரண்டு நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    தொடர் நிலநடுக்கம்

    அதேபோல் அதற்கு பின்பும் வரிசையாக அங்கு மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் முதல் நிலநடுக்கத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியே வரும் முன் வரிசையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.5 ரிக்டர், 4.8 ரிக்டர், 5.2 ரிக்டர் அளவில் நிறைய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

    என்ன பாதிப்பு

    அந்த தீவில் உள்ள பெரும்பாலான வீடுகள், கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது. தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் 82 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 100க்கும் அதிகமான நபர்கள் மோசமாக காயம் அடைந்து இருக்கிறார்கள். இன்னும் பலர் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி இருக்கிறார்கள்.

    சுனாமி எச்சரிக்கை

    நேற்று மாலை இதனால் ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இந்தியா, சீனா, இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் சில மணி நேரத்தில் சுனாமி பாதிப்பு இல்லை என்று கூறி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.

    English summary
    Indonesia Earthquake: 82 people died, Tsunami warining cancelled after massive damages.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X