For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10 ஆண்டில் 8 அடி கடலுக்குள் போன இந்தோனேசியா.. மொத்தமாக மூழ்கும் அபாயம்.. தலைநகரை கைவிட முடிவு

இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவை கைவிட அந்நாட்டு அரசு முடிவெடுத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Indonesia capital Jarkta: 10 ஆண்டில் 8 அடி கடலுக்குள் போன இந்தோனேசியாவின் தலைநகர்- வீடியோ

    ஜகர்தா: இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவை கைவிட அந்நாட்டு அரசு முடிவெடுத்து இருக்கிறது. புதிய தலைநகர் ஒன்றை தேர்வு செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

    உலகில் சில நாடுகள் பல்வேறு பிரச்சனைகளால் தங்களது தலைநகரை இதுவரை மாற்றி இருக்கிறது. பிரேசில், ஆஸ்திரேலியா, கஜகஸ்தான் ஆகிய நாடுகள் கூட தங்களது தலைநகரை இதுவரை மாற்றி உள்ளது.

    இந்த நிலையில்தான் இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவை கைவிட அந்நாட்டு அரசு முடிவெடுத்து உள்ளது. ஆனால் இதற்கு பின் திடுக்கிடும் காரணம் ஒன்று இருக்கிறது.

    மர்மம் விலகியது.. ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பாக்தாதி சாகவில்லை.. 'போர்' தொடரும் என வீடியோவில் அறிவிப்பு மர்மம் விலகியது.. ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பாக்தாதி சாகவில்லை.. 'போர்' தொடரும் என வீடியோவில் அறிவிப்பு

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இந்தோனேசியாவை கொஞ்சம் கொஞ்சமாக கடல் ஆக்கிரமித்து வருகிறது. அங்கு கடந்த 10 வருடங்களில் கடல் வேகமாக ஊருக்குள் வந்து உள்ளது. இதனால் 8 அடி வரை நிலப்பரப்பு கடலுக்குள் சென்று உள்ளது. இது போக போக இன்னும் வேகம் எடுக்கும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    மோசமாகும்

    மோசமாகும்

    வரும் 2025ல் அதாவது வெறும் 6 வருடங்களில் அங்கு 5 கிமீ தூரத்திற்கு தலைநகர் ஜகர்தா கடலுக்குள் சென்றுவிடும். தற்போது இருக்கும் பிரதமர் அலுவலகம் வரை கடலுக்குள் சென்றுவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் தற்போது அங்கு தலைநகரை மாற்ற முடிவெடுத்து இருக்கிறார்கள்.

    ஏற்கனவே இருந்தது

    ஏற்கனவே இருந்தது

    இந்த திட்டம் 1943ம் வருடத்தில் இருந்தே போடப்பட்டு வருகிறது. ஜகர்தாவை மாற்ற வேண்டும் என்று இத்தனை வருடங்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போதுதான் இதற்கு அந்நாட்டு பிரதமர் ஜோகோ விடோடா அனுமதி அளித்து இருக்கிறார்.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    தலைநகர் ஜகர்தாவில் மட்டும் தற்போது 3 கோடி மக்கள் வசித்து வருகிறார்கள். அங்கு நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதிக அளவில் அங்கு நிலத்தடி நீர் எடுக்கப்படுவதாலும், கடலில் அதிகம் குப்பை கொட்டப்படுவதாலும், வெப்பநிலை மாற்றத்தாலும் இப்படி கடல் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே செல்வதாக கூறப்படுகிறது.

    எங்கு வரும்

    எங்கு வரும்

    ஆனால் இந்தோனேசியாவின் புதிய தலைநகர் எங்கே வரும் என்று இன்னும் விவரம் வெளியாகவில்லை. ஜகர்தாவிற்கு வெளியே ஜாவா தீவிற்கும் வெளியே தலைநகரை மாற்றலாம் என்று இந்தோனேசிய அரசு முடிவெடுத்து உள்ளது. புதிய தீவு ஒன்றில் தலைநகரை நிர்மாணிக்கலாம் என்று இவர்கள் முடிவெடுத்து இருக்கிறார்கள்.

    English summary
    Indonesia government nods to change its capital after Jarkta started sinking slowly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X