For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

13.25 நிமிடத்தில் மாயமான லயன் விமானம்.. ஜாவா கடலில் மிதந்த மொபைல் பேனல்.. இந்தோனேசிய விமான விபத்து!

இந்தோனேசியா விமானம் காணாமல் போனது குறித்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

ஜகர்த்தா: இந்தோனேசியா விமானம் காணாமல் போனது குறித்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது.

இந்தோனேசிய விமானம் ஜாவா கடலில் விழுந்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விமானத்தில் பயணித்த மக்களின் நிலை என்னவென்று இதுவரை தகவல் வெளியாகவில்லை.

லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜேடி610 விமானம்தான் கடலில் விழுந்தது. இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்கல் பினாங் நகரம் நோக்கி இந்த விமானம் சென்றுள்ளது.

இன்னும் கண்டுபிடிக்கப்படாத மலேசிய விமானம்.. அடுத்தடுத்த விபத்தில் சிக்கும் இந்தோனேஷிய விமானங்கள்இன்னும் கண்டுபிடிக்கப்படாத மலேசிய விமானம்.. அடுத்தடுத்த விபத்தில் சிக்கும் இந்தோனேஷிய விமானங்கள்

எப்போது நடந்தது

இந்த விமானம் சரியாக இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்கல் பினாங் நகரம் நோக்கி புறப்பட்டு இருக்கிறது. ஆனால் விமானம் புறப்பட்ட 13 நிமிடம் 23 நொடிகளில் காணாமல் போய் இருக்கிறது. அதன்பின் அந்த விமானத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை.

கடைசி குரல்

விமானிகளுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து முயன்று இருக்கிறார்கள். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடைசியாக விமானியிடம் பேசிய போது, விமானத்தை மீண்டும் ஜகர்த்தா விமான நிலையத்துக்கே கொண்டு வாருங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பதில் எதுவும் வரவில்லை என்கிறார்கள்.

189 பேர்

அந்த விமானத்தில் மொத்தம் 189 பயணிகள் இருந்துள்ளனர். இதில் 7 பேர் விமான பணியாளர்கள் மற்றும் 1 குழந்தை விமானத்தில் இருந்துள்ளனர். இவர்களில் ஒருவர் கூட இப்போதுவரை மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாவா கடல்

ஜாவா கடலில்தான் இந்த விமானம் விழுந்துள்ளது. ஆனால் கரையில் இருந்து அதிக தூரத்தில் விழுந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். இந்த விமானம் 35 மீட்டர் வரை கடலுக்கு அடியில் சென்று இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதைவிட அதிக ஆழம் என்று இருந்தால் மீட்பு பணியை செய்வது கடினம் ஆகும்.

என்ன உயரம்

இந்த விமானம் திடீர் என்று அதிக உயரத்தை நோக்கி சென்றதுதான் ஏன் என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பி வருகிறார்கள். 1080 மீட்டர் உயரத்தில் சென்ற விமானம் 1520 உயரத்திற்கு செட் செய்யப்பட்டு வேகமாக மேலே நோக்கி பறந்துள்ளது. இந்த நிலையில் 1,113 மீட்டர் உயரம் செல்லும்போது, அந்த விமானம் தொடர்பை இழந்துள்ளது.

இன்னொரு குழப்பம்

அதேபோல் இந்த விமானம் 300 நாட்ஸ் வேகத்தில் முதலில் சென்றுள்ளது. ஆனால் காணாமல் போவதற்கு 1 நிமிடம் முன், அதாவது விமானம் புறப்பட்ட 12 நிமிடத்தில் வேகம் அதிகரித்துள்ளது. திடீர் என்று 345 நாட்ஸ் வேகத்தில் சென்று உள்ளது. இதுவும் ஏன் நிகழ்ந்தது என்று தெரியவில்லை.

மீட்பு பணி

தற்போது தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள். விமான படையும் தீவிர தேடுதல்வேட்டையில் இறங்கியுள்ளது. மிகவும் திறமை வாய்ந்த கடல் வல்லுநர்கள், டைவர்கள் மீட்பு பணிக்காக களமிறங்கி உள்ளனர்.

கண்டுபிடித்தனர்

இப்போதுவரை ஒரு போன் பேக் பேனல், சில விமான கருவியின் பாகங்கள், மற்றும் விமானத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் ஸ்டிக்கர் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜாவா கடலின் நடுவில் இந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குதான் தற்போது தேடுதல் பணிகள் நடந்து வருகிறது.

 லயன் விமானம்

லயன் விமானம்

லயன் ஏர் நிறுவனம் இந்தோனேசியாவின் மிகவும் பெரிய, புதிய விமான நிறுவனம் ஆகும். இவர்கள் நிறைய விமானங்களை இயக்கி வருகிறார்கள். இந்த விபத்துக்கு உள்ளான விமானம் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் ஆகும். இது 2016ல் தான் உருவாக்கப்பட்டது. 2017ல்தான் பயன்பாட்டுக்கு வந்தது. காணாமல் போன இந்த குறிப்பிட்ட விமானம் கடந்த ஆகஸ்டில்தான் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

English summary
Indonesia Plane Crash: The scary story of Lion gone missing to found in Sea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X