For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தோனேஷியாவை சின்னாபின்னமாக்கிய நிலநடுக்கம்.. சுனாமி.. பலி எண்ணிக்கை 1200ஆக உயர்வு!

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,203 ஆக உயர்ந்துள்ளதால் மக்கள் துயரில் ஆழ்ந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தோனேசியாவில் சுனாமியால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 1200 ஆக உயர்வு- வீடியோ

    சுலேவேசி: இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,203 ஆக உயர்ந்துள்ளதால் மக்கள் துயரில் ஆழ்ந்துள்ளனர்.

    இந்தோனேஷியாவின் சுலேவேசியா தீவில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுலேவேசியாவின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

    ரிக்டர் அளவில் 7.5ஆக இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. இதைத்தொடர்ந்து நில அதிர்வுகளும் ஏற்பட்டன.கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வெள்ளிக்கிழமை மாலை சுனாமி பேரலைகள் தாக்கின. இந்தோனேஷியாவின் பல பகுதிகளை சுனாமி தாக்கியது.

    [ நடிகர் சிவாஜி பிறந்தநாள்.. சிலைக்கு மரியாதை செலுத்திய துணை முதல்வர் ஓ.பி.எஸ் ]

    நாசமான தீவு

    நாசமான தீவு

    குறிப்பாக சுலாவேசி தீவு சுனாமி பேரலையில் சிக்கி சின்னாபின்னமானது. 19 அடி உயரத்திற்கு ஆவேசமாக எழுந்த அலைகள் அந்த தீவையே நாசப்படுத்தின.

    நேற்று 800ஐ தாண்டியது

    நேற்று 800ஐ தாண்டியது

    பலு மற்றும் தாங்கலா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பலு கடலோர பகுதியில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 821 சடலங்களும், டோங்லாவில் 11 சடலங்களும் மீட்கப்பட்டதையடுத்து பலி எண்ணிக்கை நேற்று 800ஐ தாண்டியது.

    1200ஐ தாண்டியது

    1200ஐ தாண்டியது

    இதில் உயிரிழந்தவர்களின் 61 பேர் வெளிநாட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தோனேஷிய அரசு விடுத்துள்ள அறிக்கையில் இதுவரை 1,203 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மீட்புப்பணிகளில் தொய்வு

    மீட்புப்பணிகளில் தொய்வு

    தொடர்ந்து பலு மற்றும் தாங்கலா பகுதிகளில் மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன. தாங்கலா நகர் பலத்த சேதத்தை சந்தித்துள்ளதால் அங்கு மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து ஒதுங்கும் உடல்கள்

    தொடர்ந்து ஒதுங்கும் உடல்கள்

    எனவே இந்த நகரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சுவதாக இந்தோனேசிய தேசிய தேடுதல் மற்றும் மீட்புப்பணி இயக்ககம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து கடற்கரையோரங்களிலும் உடல்கள் ஒதுங்கி வருகின்றன. தொடர்ந்து உடல்கள் ஒதுங்கி வருவதால் மக்கள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    English summary
    Indonesia Tsunami death toll increased as 1203. Tsunami attacked indonesia on last friday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X