For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலுக்கு அடியில் ஏதோ நடந்துள்ளது.. இந்தோனேஷியா சுனாமி வித்தியாசமானது.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் மிகவும் வித்தியாசமானது என்று விஞ்ஞானிகள் ஆச்சர்யமடைகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தோனேசியாவில் சுனாமியால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 1200 ஆக உயர்வு- வீடியோ

    ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் மிகவும் வித்தியாசமானது, இது எப்படி இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று விஞ்ஞானிகள் ஆச்சர்யமடைகிறார்கள்.

    கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகி இருக்கிறது.

    இதனால் சுனாமி ஏற்பட்டது. சுலசேஸி தீவு முழுக்க இதனால் நீர் புகுந்தது. இந்த சுனாமி மிகவும் வித்தியாசமானது, இதன் ஆற்றல் ஆச்சர்யமாக உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

    [ உச்சந்தலையில் ஏறிய போதை.. நண்பனை கிணற்றில் தள்ளி விட்டு விளையாட்டு.. பறி போன உயிர்! ]

    பெரிய சுனாமி

    பெரிய சுனாமி

    இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக இதுவரை 1200 பேர் பலியாகி உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவின் சுலசேசி தீவில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை அங்கிருந்து 100000 பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

    எப்படிப்பட்ட நிலநடுக்கம்

    எப்படிப்பட்ட நிலநடுக்கம்

    இந்தோனேஷியாயாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் என்பது நிலத்தின் அடுக்குகள் கிடைமட்டமாக நகர்வது காரணமாக உருவானது. இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. 2004ல் 9.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்பது மேல்கீழாக அடுக்குகள் நகர்வதால் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகும். இதுதான் கடல் நீரை மொத்தமாக வெளியே கொண்டு வந்து கொட்டும். அதுதான் அப்போதும் நடந்தது.

    என்ன வித்தியாசம்

    என்ன வித்தியாசம்

    ஆனால் தற்போது கிடைமட்டமாக ஏற்பட்ட ஒரு நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் இருந்துள்ளது. எப்படி இந்த நிலநடுக்கம் தண்ணீரை வெளியே கொண்டு வந்து கொட்டியது. 5 மீட்டர் வரை எப்படி அலையை உயர செய்தது என்று எல்லோரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

    பெரிய குழப்பம்

    பெரிய குழப்பம்

    இது சுனாமியை உண்டாக்க கூடிய நிலநடுக்கம் கிடையாது என்பதால்தான் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு சில நிமிடத்தில் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. ஆனால் இயற்கை மனிதர்களை எல்லோரையும் ஏமாற்றிவிட்டு சுனாமியை உருவாக்கி உள்ளது.

    என்ன ஆச்சர்யம்

    என்ன ஆச்சர்யம்

    இதுதான் விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கி உள்ளது. எப்படி இந்த நிலநடுக்கம் சுனாமியை உண்டாக்கியது என்று குழப்பத்தில் இருக்கிறார்கள். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் கடலுக்கு அடியில் பெரிய மாற்றம் ஒன்று நடந்து இருக்க வேண்டும், அதன் காரணமாகவே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்க வேண்டும் என்று இவர்கள் விவாதம் செய்து வருகிறார்கள்.

    English summary
    Indonesia Tsunami literally surprised every researcher in the world.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X