இந்தோனேஷியா கடற்கரையில் கிடக்கிறதா ஸ்ரீவிஜயா விமான பாகங்கள்? பொதுமக்கள் தகவலால் பரபரப்பு
ஜகார்த்தா: 50 பயணிகளுடன் இந்தோனேசியாவில் இருந்து கிளம்பிய விமானம் அந்த நாட்டு தலைநகர் ஜகார்த்தா கடற்கரையில் உடைபட்ட நிலையில் கிடப்பதாக பொதுமக்கள் சிலர் தகவல் கொடுத்துள்ளனர்.

ஜகார்த்தாவிலிருந்து பொண்டியானாக் (போர்னியோ தீவு) செல்ல ஸ்ரீவிஜயா என்ற போயயிங் 737 வகை விமானம் விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 50 பயணிகளுடன் கிளம்பியது.

சுமார் 10,000 அடி உயரத்தில் விமானம் பறக்கத் தொடங்கியதும், திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. விமானம் கிளம்பிய 4 நிமிடங்களில் இந்த சம்பவம் நடந்துவிட்டது.
59 பேருடன் புறப்பட்ட இந்தோனேஷிய விமானம் மாயம்.. ரேடார் தொடர்பும் துண்டிப்பு!
விமானம் எங்கே இருக்கிறது என்ற தகவல் தெரியாத நிலையில் ஜகார்த்தா கடற்கரையில் அதனுடைய உடைபட்ட பாகங்கள் கிடப்பதாக பொதுமக்கள் சிலர் தகவல் கொடுத்துள்ளனர். எனவே காவல்துறையினரும் பிற மீட்புப் படையினரும் அங்கு விரைந்துள்ளனர். அது உண்மையிலேயே விமானத்தின் பாகங்கள் தான் என்பதை இனிதான் அதிகாரிகள் உறுதி செய்ய உள்ளனர்.