For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாப்ட்வேர்களை உரிமம் இன்றி பயன்படுத்திய இந்திய ஜவுளிக்கடை - 60 லட்சம் அபராதம் விதித்த அமெரிக்க கோர்ட

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: விற்பனைக்கு உரிமம் பெறாத சாப்ட்வேரை பயன்படுத்தி அமெரிக்க ஜவுளி நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய இந்திய ஜவுளி நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் ரூ.66 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் செயல்படும் ஜவுளி நிறுவனம் பிரதிபா சின்டெக்ஸ். இந்த நிறுவனம் அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் உட்பட பல முன்னணி நிறுவனங்களுக்கு துணிகளை ஏற்றுமதி செய்து வருகிறது.

Indore textile firm to cough up $100,000 for using pirated software

இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நீதிமன்றத்தில் பிரதிபா நிறுவனத்தின் மீது கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் கமலா ஹாரீஸ் தொடர்ந்த வழக்கில், "பிரதிபா சின்டெக்ஸ் நிறுவனம் மைக்ரோசாப்ட், அடோப் உள்ளிட்ட அமெரிக்க முன்னணி நிறுவனங்களின் சாப்ட்வேரை உரிமம் பெறாமல் பயன்படுத்தி குறைந்த விலைக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்துள்ளது.

இதனால், சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதுடன் கலிபோர்னியாவில் உள்ள ஜவுளி தயாரிப்பு நிறுவனங்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன.இதனால் பிரதிபா நிறுவனத்துக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி பிரதிபா நிறுவனத்துக்கு ரூ.66 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

English summary
An Indian textile company has agreed to pay a penalty of Rs 66 lakhs to settle charges of using pirated software that gave it competitive advantages over American businesses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X