For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தை பொங்கலுக்கு தமிழில் வணக்கம் சொல்லி வாழ்த்திய இங்கிலாந்து, கனடா பிரதமர்கள்

இங்கிலாந்து பல்வேறு வழிகளில் வளர்ச்சி பெற்றதற்கு தமிழ் சமூகத்தினர் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர் என்று தெரசா மே தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    பொங்கலுக்கு தமிழில் வாழ்த்து கூறிய அயல்நாட்டு தலைவர்கள்

    லண்டன்: பிரிட்டன் வாழ் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே தைப் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

    தமிழர் திருநாளாம் உழவர் திருநாள் மிகச் சிறப்பான அளவில் உலகமெங்கும் வகிக்கும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூர், கனடா, இங்கிலாந்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    பிரிட்டன் வாழ் தமிழர்கள் அனைவருக்கும் தைப் பொங்கல் வாழ்த்துகள். எதிர்வரும் ஆண்டு இனிமையானதாக அமையட்டும்" என தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து கூறி வீடியோ பதிவிட்டுள்ளார்.
    அந்த வீடியோவில் தெரசா மே உணர்ச்சி பொங்க பேசியுள்ளார். தெரசா மே பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

    தமிழில் வாழ்த்திய தெரசா மே

    வணக்கம்.

    தைப் பொங்கல் விழா தொடங்குவதால் பிரிட்டன் வாழ் தமிழர்கள் உலகின் பிற பகுதிகளில் உள்ள தமிழ் மக்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழையன கழிந்து புதிய வாய்ப்புகளை ஆரத்தழுவிக் கொள்ளும் தருணம் இது. உழவுக்கு மட்டும் நன்றி செலுத்தும் நாள் அல்ல இது நமது உறவினர்களுக்கு நண்பர்களுக்கும் அண்டைவீட்டாருக்கும் நன்றி செலுத்தும் நாள் இது.

    தமிழ்சமூகத்தில் பங்களிப்பு

    தமிழ்சமூகத்தில் பங்களிப்பு

    பிரிட்டன் வாழ் தமிழர்களின் பங்களிப்புக்கு நாம் அனைவரும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க இது நல்லதொரு வாய்ப்பு. பிரிட்டன் தமிழ்ச் சமூகத்தின் பங்களிப்பு எதிர்பார்ப்பை விஞ்சியது. பிரிட்டன் மக்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

    பொங்கல் பண்டிகை

    பொங்கல் பண்டிகை

    இத்தேசம் அனைத்து மக்களுக்கும் வாய்ப்புகளை நல்கி அவரவர் லட்சியங்களை அடைய உதவும் தேசமாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். பிரிட்டனை பன்முகத்தன்மை கொண்ட நாடாக ஆக்கியதில் தமிழ் சமூகத்தின் பங்களிப்பு அற்புதமானது. எனவே, பொங்கல் பண்டிகை கொண்டாடும் பிரிட்டன் தமிழர்களுக்கும் உலக தமிழர்களுக்கும் தைப் பொங்கல் வாழ்த்துகள் என்று அவர் கூறியுள்ளார்.

    கனடா பிரதமர் வாழ்த்து

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடூ தமிழில் வாழ்த்து கூறி பேசியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை தமிழர் பாரம்பரிய மாதமாக கடைப்பிடிக்க நாடாளுமன்றத்தில் முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ள அவர், கனடாவின் வலிமையிலும் செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது என தெரிவித்துள்ளார்.

    தை திருநாள் வாழ்த்து

    தை திருநாள் வாழ்த்து

    தனது குடும்பத்தின் சார்பில் தமிழர்களுக்கு இனிய தைப் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கனடா பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய பொங்கல் வாழ்த்து செய்திக்கு பல்வேறு தரப்பினரும் நன்றியை தெரிவித்து உள்ளனர்.

    English summary
    Prime Minister Theresa May post her twitter page, To all British Tamils celebrating today and in the days to come, let me wish you all a happy Thai Pongal, and an auspicious year ahead. Iniya Thai Pongal Nalvazhthukkal.” - Prime Minister Theresa May.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X