For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”டீ வித் ஓபாரா” – அமெரிக்காவில் ஓபாரா தொடங்கிய டீ விற்பனை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி பிரபலமான ஓபரா வின்ப்ரே கடந்த 2012 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்திருந்தார்.

அப்போது, மும்பை சேரி வாழ் தம்பதியரான பார்வதி, ராஜேஷ் ஹெக்டே இந்திய மசாலாப் பொருட்கள் கலந்த மொகலாய மசாலா டீ ஒன்றை அவருக்கு அளித்து உபசரித்தனர்.

அந்த டீயின் நறுமணத்திலும், சுவையிலும் மயங்கிய வின்ப்ரே அமெரிக்காவில் ஒரு புதிய வர்த்தக விற்பனைக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

ஓபரா சாய் டீ:

ஓபரா சாய் டீ:

அங்குள்ள சியாட்டிலைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் ஸ்டார்பக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து நேற்று அங்கு புதிய "ஓபரா சாய் டீ" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்டார்பக்ஸ் நிறுவனம்:

ஸ்டார்பக்ஸ் நிறுவனம்:

ஸ்டார்பக்ஸ் நிறுவனம் கடந்த 2012 ஆம் ஆண்டில் அட்லாண்டாவின் டீ சில்லறை வர்த்தக நிறுவனமான டீவானாவை 620 மில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், இந்த நிறுவனம் சமீபத்தில் இந்தியாவின் டாடா நிறுவனத்துடனும் விற்பனையில் இணைந்துள்ளது.

சுவையான சாய்:

சுவையான சாய்:

புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தும்போது இந்தியத் தம்பதியனரைப் பற்றியும் குறிப்பிட்ட வின்ப்ரே டீவானாவின் நிபுணருடன் தன்னுடைய தனிப்பட்ட தேர்வும் கலந்து இலவங்கப்பட்டை, இஞ்சி, ஏலக்காய், கிராம்பு கருப்பு தேயிலை இலைகள் போன்றவற்றின் சுவையுடன் கூடிய புதிய தயாரிப்பு என்று குறிப்பிட்டார்.

இதயபூர்வ அழைப்பு:

இதயபூர்வ அழைப்பு:

இது பற்றி மும்பை தம்பதியரிடம் கேட்கப்பட்டபோது தாங்கள் இதயபூர்வமாக உபசரிப்பதாகவும், தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினர்.

English summary
If Parvati and Rajesh Hegde could read the tea leaves when Oprah Winfrey visited their hovel in India in 2012, they might have insisted on a trademark contract. Or maybe not.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X