For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கி மோசடி மன்னன் நிரவ் மோடி, உறவினர்களுக்கு நெருக்கடி! ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்த இன்டர்போல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    தென்கொரியாவில் தமிழர்கள் போராட்டம் | நிரவ்வுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்- வீடியோ

    லண்டன்: நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது இன்டர்போல்.

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,578 கோடி கடன் பெற்று திரும்பி செலுத்தாமல், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவர் வைர வியாபாரி நிரவ் மோடி.

    Interpol issues red corner notice against Nirav Modi

    நிரவ் மோடியை பிடிக்க உதவி செய்யுமாறு, பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தியா கடிதம் அனுப்பி உள்ளது. நிரவ் மோடி குறித்து தகவல் தெரிந்தால் இந்தியாவிற்கு தெரிவிக்கும்படி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் தகவல் அனுப்பி கேட்டுக்கொண்டு உள்ளது.

    இந்நிலையில் நிரவ் மோடிக்கு எதிராக சர்வதேச விசாரணை அமைப்பான, இன்டர்போல் அமைப்பு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

    நிரவ் மோடி மட்டுமல்லாது அவரின் சகோதரர், நீஷால் மோடி, நிரவ் மோடிக்கு நெருக்கமான சுபாஷ் பரப் ஆகியோருக்கு எதிராகவும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    நிரவ் மோடி அவர் மனைவி அமி, சகோதரர் நிஷால், உறவுக்காரரும் கீதாஞ்சலி குரூப் பிரமோட்டருமான மெகுல் சோக்சி ஆகியோர் இவ்வாண்டு ஜனவரி முதல் வாரத்தில் இந்தியாவில் இருந்து தப்பியோடிவிட்டனர். அதன்பிறகு பஞ்சாப் நேஷனல் வங்கி, நடந்த மோசடி குறித்து சிபிஐயிடம் புகார் அளித்தது நினைவிருக்கலாம்.

    English summary
    Red Corner Notice issued against Nirav Modi by Interpol in connection with PNB Scam Case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X