For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

130 பேர் என்கவுண்டரில் பலி.. ஈரானில் வெடித்த மக்கள் புரட்சி.. காரணத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!

ஈரான் நாட்டில் அதிபர் ஹசன் ரவுஹானிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த 7 நாட்களாக கடுமையாக போராடி வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

டெஹ்ரான்: ஈரான் நாட்டில் அதிபர் ஹசன் ரவுஹானிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த 7 நாட்களாக கடுமையாக போராடி வருகிறார்கள்.

நீங்கள் எல்லோரும் தேச துரோகிகள், உடனே இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள். போராட்டம் என்ற பெயரில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டி விடுகிறீர்கள். உங்களுக்கு மன்னிப்பே கிடையாது, இந்தியாவில் யாரோ ஒருவர் யாரையோ ஒருவரை பார்த்து சொல்லும் வசனம் இது என்று நினைத்தால் அது தவறு.

இது ஈராக் அதிபர் ஹசன் ரவுஹானி அந்நாட்டு மக்களை பார்த்து சொன்ன வாசகம். ஆம் ஈரானில் தற்போது அந்நாட்டு அதிபருக்கு எதிரான போராட்டம் உச்சமடைந்துள்ளது.

ஏன் போராட்டம்

ஏன் போராட்டம்

ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி மீது அந்நாட்டு மக்கள் பல்வேறு விஷயங்களுக்காக கோபத்தில் இருக்கிறார்கள். அதில் முதல் விஷயம், அதிபர் ஹசன் ரவுஹானி ராணுவத்தின் மீது செலுத்தும் கவனத்தில் துளி கூட மக்கள் நலத்திட்டம் மீது செலுத்துவதில்லை. அங்கு நாளுக்கு நாள் பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்து வருகிறது.

விலை அதிகரிப்பு

விலை அதிகரிப்பு

அதேபோல் அங்கு பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.இன்னொரு பக்கம் ஈரான் மீது அமெரிக்கா இரண்டுக்கும் மேற்பட்ட பொருளாதார தடைகளை விதித்து உள்ளது. இதனால் ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிபர் ஹசன் ரவுஹானியின் மோசமான நடவடிக்கைகள் காரணம் என்று அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம்

கடந்த வருடம்

இதனால் கடந்த ஒரு வருடமாகவே அந்நாட்டு மக்கள் அதிபர் ஹசன் ரவுஹானிக்கு எதிராக போராடி வருகிறார்கள். ஆனால் கடந்த 7 நாட்களாக நடக்கும் போராட்டத்திற்கு காரணமே வேறு. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிபர் ஹசன் ரவுஹானி அந்நாட்டு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தினார். அதுவும் பெட்ரோல் டீசல் விலையை 300% உயர்த்தினார்.

எண்ணெய் விலை

எண்ணெய் விலை

ஈரான் தங்கள் நாட்டில் எடுக்கும் கச்சா எண்ணெய்யை வெளிநாட்டில் விற்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறது . புதிதாக 50 பில்லியன் பேரல் கொண்ட எண்ணெய் கிணறை கண்டுபிடித்துள்ளது. ஆனால் இவ்வளவு எண்ணெய் இருந்தும், தற்போது ஈரானில் பெட்ரோல் டீசல் விலை 300% உயர்ந்து இருக்கிறது என்று நம்புவீர்களா? ஆனால் நம்பினால்தான் சோறு என்று ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி கூறிவிட்டார்.

பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலை

இப்படி பெட்ரோல் டீசல் விலையில் கடும் விலையேற்றம் செய்யப்பட்டதால் கோபம் அடைந்த மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். இதை ஈரானில் ஏற்பட்டு இருக்கும் புதிய மக்கள் புரட்சி என்று இஸ்லாமிய நாடுகள் வர்ணிக்கிறது. இதனால் தற்போது ஈரான் மொத்தமும் ஸ்தம்பித்துள்ளது. ஈரானில் தற்போது இணையம், போக்குவரத்து, மின்சாரம் எல்லாம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மிக மோசம்

மிக மோசம்

இந்த போராட்டத்தில் நேற்று அந்நாட்டு ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூடு மற்றும் கலவரத்தில் மொத்தம் 130 பேர் பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் 21 முக்கிய நகரங்கள் மொத்தமாக முடங்கி, பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது.

அமெரிக்கா எப்படி

அமெரிக்கா எப்படி

ஈரான் இரண்டு பட்டால் டிரம்பிற்கு கொண்டாட்டம் என்பது போல தற்போது அமெரிக்கா இந்த பிரச்சனையில் மூக்கை நுழைக்க முயன்று வருகிறது. ஈரான் அரசு மக்களை கொடுமைப்படுத்துகிறது. மனித உரிமை மீறல்கள் நடக்கிறது. இதை அமெரிக்கா தீவிரமாக கண்காணிக்கிறது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஈரான் மறுப்பு

ஈரான் மறுப்பு

ஆனால் ஈரானோ, அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை. போராட்டம் நடந்தது. அதை கட்டுப்படுத்திவிட்டோம். யாரும் ஷோல்டரை தூக்க வேண்டாம். எங்கள் பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி உள்ளது. ஆனால் ஈரான் பிரச்சனை இப்போதைக்கு தீராது என்று உலக அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

English summary
Iran: 130 people killed in the army encounter so far in the protest goes against the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X