For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உக்ரைன் விமான விபத்து.. மன்னிச்சுடுங்க.. தெரியாமல் சுட்டு வீழ்த்திவிட்டோம்.. ஈரான் பகீர் ஒப்புதல்

ஈராக்கில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது தங்களுடைய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்டதுதான் என்று ஈரான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    உக்ரைன் விமானத்தை தெரியாமல் சுட்டு வீழ்த்திவிட்டோம்... ஈரான் ஒப்புதல் | Ukranian plane incident

    டெஹ்ரான்: ஈராக்கில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது தங்களுடைய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்டதுதான் என்று ஈரான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு இருக்கிறது. தெரியாமல் சுட்டு வீழ்த்திவிட்டோம் என்று ஈரான் கூறியுள்ளது.

    மூன்று நாட்களுக்கு முன் ஈரானில் இருந்து பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இது உக்ரைன் நாட்டு அரசுக்கு சொந்தமான விமானம் ஆகும். டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைன் நோக்கி அந்த போயிங் 737 -800 விமானம் புறப்பட்டது.

    விமானத்தில் பயணித்த 176 பேரும் பலியானார்கள். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக ஈரான் நடத்திய ராக்கெட் தாக்குதலால் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என்று புகார் எழுந்துள்ளது.

    வேகமாக சென்று தாக்கிய ஈரான் ஏவுகணை.. நொறுங்கி விழுந்த உக்ரைன் விமானம்.. அதிர வைக்கும் வீடியோ!வேகமாக சென்று தாக்கிய ஈரான் ஏவுகணை.. நொறுங்கி விழுந்த உக்ரைன் விமானம்.. அதிர வைக்கும் வீடியோ!

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இந்த விமான விபத்து தாக்குதல் கிடையாது. அது தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிகழ்ந்த விபத்து. எங்கள் மீது புகார் கூற வேண்டாம். எங்கள் மீது பழி போட வேண்டாம் என்று ஈரான் தொடர்ந்து கூறி வந்தது. உக்ரைன் புகாரை ஈரான் தொடர்ந்து மறுத்து வந்தது.

    உலக நாடுகள்

    உலக நாடுகள்

    ஆனால் ஈரானில் நடந்த விமான விபத்து தற்போது உலகம் முழுக்க பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், உக்ரைன், கனடா ஆகிய நாடுகள் இதில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. அமெரிக்காவுடன் சேர்ந்து கனடா உள்ளிட்ட நாடுகள் இந்த விமான விபத்து குறித்து விசாரிக்க தொடங்கி உள்ளது.

    என்ன ஒப்புதல்

    என்ன ஒப்புதல்

    இந்த அழுத்தம் காரணமாக ஈராக்கில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது தங்களுடைய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்டதுதான் என்று ஈரான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு இருக்கிறது. ஈரான் அரசு தொலைக்காட்சியில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி உக்ரைன் விமானத்தை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம்.

    நாங்கள்தான்

    நாங்கள்தான்

    ராக்கெட் தாக்குதல் நடத்தும் போது தவறாக சுட்டு வீழ்த்திவிட்டோம். தெரிந்து செய்யவில்லை. இந்த விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பாக முறையான விசாரணைக்கு ஒத்துழைப்போம்.

    யார் காரணம்

    யார் காரணம்

    வீரர்கள் கவனக்குறைவால் இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நிவாரண நிதி அளிக்கப்படும். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காது என்று, ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த செயல் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    English summary
    Iran accepts that Ukranian plane accident was because of their missile attack which was a human error.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X