For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோலிய துறையில் ஊடுருவிய அமெரிக்க உளவாளிகள்.. கொத்தாக அள்ளியது ஈரான்

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்காவிற்கு எதிராக ஈரானுடன் கரம் கோர்க்கும் ஈராக்

    தெஹ்ரான்: ஈரானிய எரிசக்தி கொள்கையில் தலையிட்டதாக கூறி, அந்த நாட்டு பெட்ரோலிய அமைச்சகத்தில் பணியாற்றிய, 16 அதிகாரிகளை கைது செய்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    பல நாடுகளில் செயல்பட்ட அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் "மிகவும் சிக்கலான" உளவு நடவடிக்கைகளை கண்டுபிடித்துள்ளோம் என்று, கடந்த வாரம் ஈரான் அரசு அறிவித்ததற்கும், இந்த கைதுக்கும் தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    Iran announces arrest of 16 oil ministry officials for spying

    அரசுக்கு சொந்தமான ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல்படி, வார இறுதியில் நடத்தப்பட்ட சோதனைகளில், 16 அதிகாரிகள், கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் ஈரானின் எண்ணெய் வளத் துறையில், உற்பத்தி மற்றும் விநியோகம் பிரிவுகளில், நிர்வாக பதவிகள் இருந்தவர்கள்.

    இந்த கைது பற்றிய தகவலை, மூத்த நாடாளுமன்ற உறுப்பினர், அலி ஹஜி டெலிகானி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இந்த அதிகாரிகள், ஒரு பெண்ணின் வழிகாட்டுதலோடுதான் இப்படி செயல்பட்டுள்ளனர். எண்ணை வளத்துறை அமைச்சகம் எடுக்கும் முக்கிய முடிவுகளில், இந்த அதிகாரிகளின் தலையீடு இருந்துள்ளது. தவறான முடிவுகளை எடுக்க அவர்கள் தூண்டுதலாக இருந்துள்ளனர்.

    எதிரி நாடுகளின் விருப்பத்திற்கு ஏற்ப, ஈரான் நாட்டின் நலன்களுக்கு எதிராக இவர்கள் முடிவெடுத்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆனால், அந்த பெண் யார், அமெரிக்க உளவாளிகளா இவர்கள் என்பது தொடர்பான தகவல்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார். இருப்பினும் இது அமெரிக்காவின் உளவாளிகள் தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    English summary
    Iranian state media announced on Sunday the arrest of 16 officials in the country’s Ministry of Petroleum, allegedly for sabotaging Iranian energy policy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X