For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈராக் தாக்குதலில் எத்தனை அமெரிக்க வீரர்கள் பலியானார்கள்.. தொடரும் மர்மம்.. எதை மறைகிறார் டிரம்ப்?

அமெரிக்கா ராணுவ தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80பேர் பலியானதாக ஈரான் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்க விமான படை தளம் மீது ஈரான் ராக்கெட் தாக்குதல்

    டெஹ்ரான்: அமெரிக்கா ராணுவ தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80 பேர் பலியானதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்க அரசோ, அதிபர் டிரம்போ இதை பற்றி இன்னும் எதுவும் உறுதியாக தெரிவிக்கவில்லை.

    இன்று ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் 2 விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. மொத்தம் 12 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது. மொத்தம் இரண்டு ராணுவ தளங்கள் இப்படி தாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இர்பில், அல் அசாத் ஆகிய பகுதிகளில் இந்த தாக்குதல் நிகழ்ந்து இருக்கிறது. இரண்டுமே அமெரிக்காவின் படை வீரர்கள் அதிகம் இருக்கும் ஈராக் பகுதி ஆகும்.

     சுலைமானி உடலை புதைத்து சில மணி நேரத்தில் தாக்குதல்.. சொல்லிவிட்டு செய்த ஈரான்.. என்ன நடந்தது? சுலைமானி உடலை புதைத்து சில மணி நேரத்தில் தாக்குதல்.. சொல்லிவிட்டு செய்த ஈரான்.. என்ன நடந்தது?

    அந்த கேள்வி

    அந்த கேள்வி

    இந்த தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள் என்பது மட்டும் இன்னும் மர்மமாக இருக்கிறது. அமெரிக்க அரசு இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. எத்தனை பேர் பலியானார்கள் என்பது கணக்கெடுத்துக் கொண்டு இருக்கிறோம் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால் ஈரான்

    ஆனால் ஈரான்

    ஆனால் ஈரான் தரப்பு முதற்கட்ட ஆய்வின்படி அங்கு 80 அமெரிக்க வீரர்கள் பலியானதாக தகவல் வெளியிட்டுள்ளது. 80 வீரர்களின் உடல்களை ஈராக் படைகள் கைப்பற்றி உள்ளது. ஈராக் படை இது தொடர்பான தகவலை எங்களிடம் தெரிவித்தது என்று ஈரான் கூறியுள்ளது. அமெரிக்காவை இந்த தகவல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    மறைப்பு

    மறைப்பு

    இந்த தாக்குதலில் நிறைய சேதங்கள் நடந்து இருக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதங்களை அமெரிக்கா வெளியே சொல்லாமல் மறைக்கிறது. ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்திவிட்டுதான் அமெரிக்கா உண்மையை சொல்லும். அது வரை அமெரிக்கா வாய் திறக்காது என்கிறார்கள்.

    என்ன அதிகம்

    என்ன அதிகம்

    80 வீரர்கள் பலியானது உறுதியெனில், சமீப நாட்களில், அமெரிக்க வீரர்கள் அதிகமாக பலியானது இந்த தாக்குதலாகத்தான் இருக்கும். 80 பேர் பலியானது உறுதியானால் கண்டிப்பாக அமெரிக்கா மிகப்பெரிய பதில் தாக்குதலை நிகழ்த்தும். அது இன்னொரு போரை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Iran attack on the US military base: Huge confusion over casualties due to missile strike.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X